Breaking

Tuesday, April 20, 2021

தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - நாள். 20.04.2021

தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6 ந.க.எண். 06881/கே1/2020, நாள். 20.04.2021
பொருள் தொடக்கக் கல்வி - கல்வி முறையை மேம்படுத்துதல் - இணைப்பு பாடப்பயிற்சி கட்டகம் (Bridge Course) மற்றும் பயிற்சி புத்தகம் Work Book) - காணொலி வடிவில் தயாரிக்கப்பட்டு கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்புதல் - உரிய அறிவுரை வழங்குதல் -சார்பாக. பார்வை சென்னை - 6 மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி 1 நிறுவனம், இயக்குநரின் கடிதம்
பார்வையில் காண் கடிதத்தில் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் அவர்களின் அறிவுரையின்படி மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதல் கட்டமாக இணைப்பு பாடப்பயிற்சி கட்டகமும் (Bridge Course) மற்றும் இரண்டாம் கட்டமாக பயிற்சி புத்தகமும் ( Work Book) - காணொலி வடிவில் தயாரிக்கப்பட்டு கல்வித் தொலைக்காட்சியில், ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாக கால அட்டவணை பெறப்பட்டுள்ளது. எனவே, அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் உரிய வழிமுறைகளை பின்பற்றி செயல்படும் பொருட்டு, பார்வையில் காண் கடிதம் மற்றும் கால அட்டவனையினை இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. அனைத்து மாணவர்களும் காணொலிகளை பார்த்து பயன் பெறுவதை உறுதி செய்யதிட அனைத்து பள்ளி தலைமையாசியர்களுக்கும் அறிவுறுத்துமாறு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இப்பொருள் சார்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரத்தினை அறிக்கையாக அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இணைப்பு. கால அட்டவணை மற்றும் கடித நகல் CLICK HERE TO DOWNLOAD

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog