தனித் தேர்வர்களுக்கான 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்த அறிவிப்பை தேர்வுத் துறை விரைந்து வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கரோனா பரவல் காரணமாக நடப்பு கல்வி ஆண்டும் 10-ம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்பட்டது. சுமார் 10.22 லட்சம் பள்ளி மாணவ, மாணவிகள் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவதாகவும், தேர்வு மதிப்பீடு விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என்றும் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.
அதேநேரம், தனித் தேர்வர்களுக்கான தேர்வு குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்று புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து தனித் தேர்வர்கள் சிலர் கூறியதாவது:
தனித் தேர்வர்களுக்கான 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து இதுவரை எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. தேர்வுகள் நடத்தப்படுவதை உறுதிபட தெரிவித்தால் அதற்கு தயாராக உதவியாக இருக்கும். மேலும், உயர்கல்வி சேர்க்கை உள்ளிட்ட எதிர்காலத் திட்டங்கள் குறித்து முடிவெடுக்கவும் வசதியாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆண்டுதோறும் சராசரியாக 10 ஆயிரம் தனித் தேர்வர்கள் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி வருவது குறிப்பிடத்தக்கது..
Search This Blog
Saturday, April 10, 2021
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.