ஆந்திர மாநிலத்தில் இன்று முதல் 1 முதல் 9ம் வகுப்பு வரை பள் ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ள தாக கல்வித்துறை அமைச்சர் தகவல் தெரி வித்துள்ளார்.
ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் தலைமையில் கல் வித்துறை மற்றும் மருத்துவத்துறை அதிகாரி களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் கொரோனா 2வது அலை பரவல் காரணமாக கல்வித் துறையில் என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் வருங்காலத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஜெகன்மோகன் ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து இன்று முதல் 1 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, கல்வித்துறை அமைச்சர் ஆதிமூலப்பு சுரேஷ் நிருபர்களிடம் கூறியதாவது: இன்று முதல் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது. மேலும், 10ம் வகுப்பு, இன்டர்மிடியட் முதலாம் மற் றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு சமூக இடைவெளியுடன் கொரோனா நிபந்தனைகளை கடைபிடித்து வகுப்புகள் நடத்த ஏற்பாடுகள் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு மற்றும் இன்டர்மிடியட் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண் டுக்கான தேர்வுகள் ஏற்கனவே அறிவித்தபடி ஜூன் மாதம் நடத்தப்படும். தற்போதைய சூழலுக்கு ஏற்ப இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Search This Blog
Tuesday, April 20, 2021
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.