கொரோனா இரண்டாம் அலை தாக்கத்தின் எதிரொலியாக ஐஐடி மெட்ராஸ் மற்றும் அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் மற்றும் ஆன்லைன் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுகள் ஒத்திவைப்பு:
இந்தியாவில் கொரோனா பரவலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்க முடியாத காரணத்தால் ஒவ்வொரு மாநிலங்களிலும் தனித்தனியாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு, முழு முடக்கம் போன்ற விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் பள்ளி, கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் வழியாக பாடங்களும், தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஐஐடி மெட்ராஸ் மற்றும் அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மே மாதம் 10ஆம் தேதி நடக்கவிருந்த ஐஐடி மெட்ராஸ் செமஸ்டர் தேர்வுகளும், மே 3ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மே 10 முதல் கேந்திரியா வித்யாலய பள்ளிகளில் மாணவர்களுக்கான எழுத்துத் தேர்வுகளை நடத்த ஐஐடி மெட்ராஸ் திட்டமிட்டிருந்தது. முன்னதாக அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கான மறுதேர்வுகள் மே மாதம் 3 ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தவிர மெட்ராஸ் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளும் கொரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த பல்கலைக்கழக மாணவர்களுக்கான தேர்வுகள் மே மாதம் 17ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
Wednesday, April 28, 2021
கொரோனா பரவல் எதிரொலி - ஐஐடி மெட்ராஸ், அண்ணா பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.