கடைசி ஒரு மணி நேரம்! - கரோனா பீதியில் தேர்தல் அலுவலர்கள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, March 28, 2021

Comments:0

கடைசி ஒரு மணி நேரம்! - கரோனா பீதியில் தேர்தல் அலுவலர்கள்!

தமிழக தேர்தல் களத்தில் ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளுக்கான ஆதரவு அலை, எதிர்ப்பு அலைகளைவிட கரோனாவின் வது அலையால் தேர்தல் நடக்குமா நடக்காதா? ஊரடங்கு வருமா வராதா? என்பதுதான் இப்போதைய விவாதப் பொருளாக உள்ளது திட்டமிட்டப்படி தேர்தல் நடக்கும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவிக்க அதற்கான பணிகள் முடுக்கப்பட்டுள்ளது. ஏப். 6ம் தேதி ஓட்டுப்பதிவு நாளில், கடைசி மணி நேரத்தில் அதாவது மாலை 6 முதல் 7 மணிக்குள், கரோனா நோயாளிகளும் தேர்தல் கமிஷனால் வழங்கப்படும் பாதுகாப்பு கவச உடையும், கையுறையும் அணிந்து வந்து ஓட்டளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது அனைவரும் ஓட்டளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தேர்தல் கமிஷன் இப்படி அறிவித்திருந்தாலும் ஓட்டுச் சாவடிகளில் தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் வயிற்றில், இந்த அறிவிப்பு புளியைக் கரைத்து, பீதியில் ஆழ்த்தியுள்ளது 'நம் ஓட்டுச்சாவடிக்கு கரோனா தொற்றாளர்கள் யாரும் ஓட்டுப்போட வந்துவிடக்கூடாது என்று இப்போதிருந்தே அவர்கள் வேண்டாத தெய்வம் இல்லை மறுபக்கம் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு திருச்சி மாவட்ட தேர்தல் அதிகாரி வாயிலாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தேர்தல் கமிஷனுக்கு முறையீடு செய்துள்ளது. இது குறித்து அதன் மாநில பொருளாளர் நீலகண்டன் கூறியதாவது: ஓட்டுப்பதிவு நாளில், கரோனா தொற்றாளர்களும் கவச உடை அணிந்து வந்து ஓட்டளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. என்னதான்கவச உடை, கையுறை அணிந்து வந்து ஓட்டு மெஷின் பயன்படுத்தினாலும் அதன்பின் அதிகாரிகள் ஓட்டு மிஷின்களைமூடி சீல் வைக்கும் பணிக்காக அதை முழுமையாக கையாள வேண்டியுள்ளது அதேபோல் ஓட்டுச்சாவடிக்குள் வரும் கரோனா பாதிப்புள்ளவர்கள் அங்கு கை வைக்கவோ, தும்மவோ, இருமவோ வாய்ப்புள்ளது. இதனால் ஓட்டுச்சாவடி அதிகாரிகள், பூத் ஏஜென்ட்டுகளுக்கும் நோய் தொற்று பரவலாம் எனவே கரோனா பாதிப்புக்குள்ளானவர்களை ஓட்டுச்சாவடிகளுக்கு வரவழைப்பதற்கு பதில், அவர்களுக்கு தபால் ஓட்டு வாய்ப்பு வழங்கலாம். ஏற்கனவே, முதியவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு இம்முறை வழங்கப்பட்டுள்ளதால், கரோனா தொற்றாளர்களுக்கும் வழங்குவதில் எந்த பாதிப்பும் இருக்கப்போவதில்லை ஆனால், இதையும் மீறி கரோனா நோயாளிகளை ஓட்டுச் சாவடிகளுக்குள் அனுமதித்து அதனால் தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதற்கான முழுபொறுப்பையும் அரசே ஏற்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்தேர்தல் அதிகாரிகளின் இந்த நியாயமான பயத்துக்கு தேர்தல் கமிஷன் என்ன பதில் சொல்லப் போகிறது என்பது ஒருபக்கம் இருந்தாலும், கடந்த ஆண்டு முழுவதும் எதையும் ஒழுங்கா செய்யவிடாத கரோனா தனது 2வது ரவுண்டில் தேர்தலை ஒழுங்காக நடத்தவிடாது போலிருக்கிறது என்ற சலசலப்பும் ஏற்பட்டுள்ளது இது வேறயா
ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் கிலியில் இருக்க, தேர்தல் அதிகாரிகள் ஓட்டுப்போட வரும் கரோனா தொற்றாளிகள் பயன்படுத்துவதற்காக கரோனா பாதுகாப்பு கவச உடைகள் கையுறைகள் போன்றபொருட்கள் பெங்களூரில் இருந்து, திருச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து இறங்கியுள்ளன

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews