அரசுப்பள்ளி ஆசிரியைக்கு புதுமைப்பெண் விருது! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, March 10, 2021

Comments:0

அரசுப்பள்ளி ஆசிரியைக்கு புதுமைப்பெண் விருது!

உலக மகளிர் தினம் முன்னிட்டு, நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஒன்றியம் குண்டாடா அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியை திருமதி மல்லிகா குமாருக்கு ,பாரதி கண்ட புதுமைப் பெண் விருது கேடயம் வழங்கப்பட்டது. குண்டாடா அரசு நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை மல்லிகா குமார்,இதே பள்ளியில் 2005 ஆம் ஆண்டு ஆங்கில பட்டதாரி ஆசிரியையாக பணி நியமனம் செய்யப்பட்டு, சுமார் 16 ஆண்டுகள் ஒரே பள்ளியில் தொடர்ந்து கிராமப்புற ஏழைக் குழந்தைகளுக்கு சிறப்பான கல்விப் பணி ஆற்றி வருகிறார். மக்களின் ஆங்கில மோகத்தால் பள்ளியில் மாணவர் எண்ணிக்கை 2015 ஆம் ஆண்டு வெகுவாக குறைந்து ,11 என்ற நிலைக்கு தள்ளப்பட்டு அடுத்த ஓரிரு ஆண்டுகளில் மூடும் தருவாயில் இருந்த பள்ளியை தனது அயராத மாணவர் சேர்க்கை முயற்சியினால் மாணவர் எண்ணிக்கையை இதே ஆண்டில் 70 ஆக உயர்த்தி பள்ளிக்கு உயிர் ஊட்டினார். பொதுப்பணி, நெடுஞ்சாலைத்துறையில் 531 இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கு தேர்வு: ஏப்ரல் 4ம் தேதி விண்ணப்பிக்கலாம்: TNPSC அறிவிப்பு
அத்துடன் கிராம மக்களுக்கு எளிதில் கிடைக்காத ஆங்கில வழிக் கல்வியை,கல்வித் துறை அலுவலர்கள் மூலமாக, நீலகிரி மாவட்டத்தில் முதல் பள்ளியாக இவ்வரசு பள்ளியில் கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறார். தலைமை ஆசிரியர் ஒத்துழைப்புடன் மாணவர் சேர்க்கை மட்டும் அல்லாமல், மாவட்ட அளவிலான கலை இலக்கியப் போட்டிகள், தனித்திறன், விளையாட்டு, வினாடி வினா,தடகள போட்டிகள், அறிவியல் கண்காட்சிகள், திறன் தேர்வுகளில் பள்ளி மாணவர்கள் குறிப்பாக மாணவிகள் பலரை ஈடுபடுத்தி, பயிற்சி அளித்து , வெற்றியடைய செய்து சாதனைகளும் புதுமைகளும் படைத்து வருகிறார். இவற்றிற்காக ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில் V4H அமைப்பு சார்பில், பாரதி கண்ட புதுமைப் பெண் விருது-2021 , சாதனைப் பெண் விருது கேடயம் வழங்கி பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்யப்பட்டது.
10 % ஒதுக்கீடு வழங்கி குழப்பம் ஏற்படுத்துவது ஏன்? - அண்ணா பல்கலைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்
விருது பெற்ற இவரை கோத்தகிரி வட்டார கல்வி அலுவலர் திருமதி சரஸ்வதி, தலைமை ஆசிரியர் திரு நஞ்சுண்டன்,பிடிஎ தலைவர் திரு மணிகண்டன், மேலாண்மை குழு தலைவி திருமதி இந்திராணி, பெற்றோர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் பாராட்டி வாழ்த்துகள் கூறினர். இவர் ஏற்கனவே தினமலர் இலட்சிய ஆசிரியர் விருது, ஜூனியர் சேம்பர் சிறந்த ஆசிரியை, ரோட்டரி கிளப் தேசப் சிற்பி, கேரம் அகடமி சிறந்த பயிற்சியாளர், நாக்கு பெட்டா டிவி சாதனைப் பெண் மணி,பிராவிடன்ஸ் கல்லூரி சிறந்த சாதனையாளர் என எண்ணற்ற விருதுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews