தேர்தல் பணிக்கான ஊதியத்தை அதிகரிக்க வலியுறுத்தல்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, March 07, 2021

Comments:0

தேர்தல் பணிக்கான ஊதியத்தை அதிகரிக்க வலியுறுத்தல்!

Urging-to-increase-the-pay-for-election-work%2521
தேர்தல் பணிக்கான ஊதியத்தை அதிகரிக்க வேண்டும் ஓய்வு பெற்ற காவலர்கள் நல சங்கம் வலியுறுத்தல்
.com/blogger_img_proxy/தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை மாவட்ட வாரியாக - Media-Bulletin - 06.03.2021 - PDF
குமரி மாவட்ட ஓய்வு பெற்ற போலீசார் நல சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், அதன் தலைவர் பென்சிகர் தலைமையில் நாகர்கோவிலில் நடைபெற்றது. கூட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடுவது குறித்து விவாதிக்கப்பட்டது. குமரி மாவட்டத்தில் நடைபெற உள்ள 6 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பாதுகாப்பு பணிக்காக ஓய்வு பெற்ற போலீசாரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அழைத்துள்ளார். எனவே இதை ஏற்று தேர்தல் பாதுகாப்பு பணியில் முழு கவனத்துடன் ஈடுபட வேண்டும். முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வழங்குவது போல், ஓய்வு பெற்ற போலீசாருக்கும் தேர்தல் பணிக்கான ஊதியம் உயர்த்தி வழங்க வேண்டும். குமரி மாவட்டத்தில் கோயில் பாதுகாப்பு பணிக்கு விருப்பம் தெரிவித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளவர்களை உடனடியாக கோயில்களில் பாதுகாப்பு பணிக்கு நியமிக்க வேண்டும்.
.com/blogger_img_proxy/தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை மாவட்ட வாரியாக - Media-Bulletin - 06.03.2021 - PDF
கோயில் பாதுகாப்பு பணிக்கு 65 வயது என காலவரம்பை நீட்டிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. காவல் கட்டுப்பாட்டு அறை இன்ஸ்பெக்டர் சாம்சன், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று தேர்தல் பணி தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
IMG_20210307_101743

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews