கொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. இதனால் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்கள் கல்வியை தொடர முடியாதநிலை ஏற்பட்டது. குறிப்பாக, சாலையோரம் வசிக்கும் குழந்தைகள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகள் கல்வியை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காலத்தில் தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை 280 மடங்கு அதிகரித்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக, குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு பிரசார இயக்கம் ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
காமராஜர் பல்கலை பருவத்தேர்வுகள் தேதி அறிவிப்பு – மார்ச் 22 முதல் தொடக்கம்!
கொரோனா ஊரடங்கு காலத்தில் குழந்தை தொழிலாளர்களின் நிலை தொடர்பாக தமிழகத்தின் 24 மாவட்டங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த மாவட்டங்களில் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு செப்டம்பர் 2020 முதல் நவம்பர் 2020 வரை 767 குடும்பங்களைச் சேர்ந்த 818 குழந்தைகளிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 818 குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 9 முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகளில் 93 சதவீத ஆண் குழந்தைகளும், 92 சதவீத பெண் குழந்தைகளும் கொரோனா ஊரடங்கிற்கு முன்னதாக பள்ளி சென்று கொண்டு இருந்தனர். 2 சதவீத பேர் மட்டுமே பள்ளிக்கு செல்லவில்லை. 12 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளில் ஆண்களில் 67 சதவீதம் பேர், பெண்களில் 80 சதவீதம் பேர் பள்ளிக்கு சென்றனர். 15 முதல் 18 வயது வரை உள்ளவர்களில் 40 சதவீத ஆண்களும், பெண்கள் 54 சதவீதம் பேர் பள்ளிக்கு சென்றனர்.
NMMS தேர்வுக்கான விடைக்குறிப்பு வெளியீடு – மார்ச் 12 கடைசி நாள்
கொரோனா தொற்றுக்கு முன்பாக 818 குழந்தைகளில் 553 பேர் பள்ளிகளுக்கு சென்று கொண்டு இருந்தனர். ஆனால், கொரோனா தொற்று ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்பு 553 பேரில் 419 பேர் வேலைக்கு செல்ல தொடங்கிவிட்டனர். கோவிட் தொற்று முன்பாக வேலைக்கு சென்று கொண்டு இருந்த 265 பேரில் 231 தற்போதும் வேலைக்கு சென்று கொண்டுதான் உள்ளனர். இதன்படி, குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்து, குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை 76 சதவீதம் அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்ட சமூகங்களில் இருந்து குழந்தை தொழிலாளர்கள் 28 சதவீதம் அதிகரித்து உள்ளனர்.
காமராஜர் பல்கலை பருவத்தேர்வுகள் தேதி அறிவிப்பு – மார்ச் 22 முதல் தொடக்கம்!
கொரோனா தொற்றுக்கு முன்பாக பள்ளிக்கு சென்ற 553 குழந்தைகளில் 254 பேருக்கு (47%) ஊரடங்கின்போது எந்தவித உதவியும் கிடைக்கவில்லை. 49 பேருக்கு (9%) உலர் ரேஷன் பொருட்கள் கிடைத்துள்ளது. 177 பேருக்கு புத்தகங்கள், குறிப்பேடுகள் கிடைத்துள்ளன. ஊரடங்கு காலத்தில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளில் 24 சதவீதம் பேர் இணையதள வகுப்புகளில் கலந்துகொள்வதே இல்லை. 24 சதவீதம் பேர் 25 சதவீத வகுப்புகளில் கலந்துகொள்கின்றனர்.

21.6 சதவீதம் பேர் 50 சதவீத வகுப்புகளில் கலந்துகொள்கின்றனர். 9.1 சதவீதம் பேர் அனைத்து வகுப்புகளிலும் கலந்துகொள்கின்றனர். பங்கேற்றவர்களில் 3ல் ஒருவர் இணைய வழி வகுப்புகள் பயனுள்ளதாக இல்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர். 90 சதவீதம் பேர் இணைய வகுப்புகளின் தரம் எதிர்பார்த்ததை விட கீழ்நிலையில் உள்ள தெரிவித்து உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. * என்ன செய்ய வேண்டும்? குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும். கிராம அளவில் குழு அமைத்து பணியாற்ற வேண்டும். சமூக பாதுகாப்பு திட்டங்கள் மூலம் உதவிகள் செய்ய வேண்டும். குழந்தை தொழிலாளர் சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டும்.

* ரூ.400 வரை ஊதியம் குழந்தைகள் தங்களின் வயதை பொறுத்து ரூ.100 முதல் ரூ.400 வரை சம்பாதிக்கிறார்கள். சில வேலைகளில் அதை விட அதிகம் சம்பாதிக்கின்றனர். சிலரிடம் ஊதியம் குறித்த தெளிவான தகவல் இல்லை. * 17 மாவட்டங்களில் அதிகரிப்பு ஊரடங்கு காலத்தில் சென்னை, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

* கொத்தடிமை முறையில் தள்ளப்படும் அபாயம் கொரோனா ஊரடங்கு காலத்தில் வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தால் பல குடும்பங்கள் அதிக வட்டி விகிதத்தில் நிறைய கடன் வாங்கி உள்ளனர். குறிப்பாக தங்களது முன்னாள் முதலாளிகளிடம் அதிக கடன் வாங்கியுள்ளனர். இதனால், இவர்களில் பலர் கொத்தடிமை முறைக்கு தள்ளப்படும் அபாயம் உள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.