காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு கீழ் உள்ள கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுகலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு முதல் பருவத்தேர்வுகள் மார்ச் 22 ஆம் தேதி மற்றும் மார்ச் 24 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளதாக பல்கலைகழகம் தெரிவித்துள்ளது.
Wanted - PGT, TGT & PRT - ALL SUBJECTS
முதலாம் ஆண்டு பருவத்தேர்வுகள்:
தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக கல்லூரிகள் மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. இந்நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. 10 மாதங்களுக்கு பின்னர் கல்லூரிகளில் அனைத்து வகுப்புகளும் பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி முதல் வழக்கம் போல் செயல்பட்டு வந்தன. கொரோனா காரணமாக செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. குறிப்பாக முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பருவத்தேர்வு குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படாமல் இருந்தது. சில தன்னாட்சி கல்லூரிகள் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பிப்ரவரி மாதமே தேர்வுகள் நடத்தின.
10ம் வகுப்பு பாஸா அஞ்சல் துறையில் வேலை இருக்கு
இதனால் பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகள் குழப்பமடைந்தன. தற்போது பல்கலைக்கழகம் இளங்கலை மற்றும் முதுகலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெறும் தேதியை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து காமராஜர் பல்கலைக்கழக தேர்வாணையர் அலுவலகத்தில் இருந்து கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளவை, “2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு இணையதளம் மூலமாக தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் 2021 ஆம் கல்வி ஆண்டுக்கான முதலாம் ஆண்டு இளங்கலை மாணவர்களுக்கான தேர்வுகள் மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
Wanted - PGT, TGT & PRT - ALL SUBJECTS
முதலாம் ஆண்டு முதுகலை மாணவர்களுக்கான தேர்வுகள் மார்ச் மாதம் 22 ஆம் தேதி முதல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வுகளுக்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் தேர்வு கட்டணத்தை ரூ.240 மார்ச் மாதம் 10 ஆம் தேதிக்குள் அபராதமின்றி செலுத்தலாம். அபராதத்துடன் மார்ச் 13 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும்’, இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.