சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு ஆல்பாஸ் அறிவிப்பு பொருந்துமா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, March 02, 2021

Comments:0

சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு ஆல்பாஸ் அறிவிப்பு பொருந்துமா?


மாநில அரசால் வழங்கப்படும் முன்பணம் மற்றும் கடன்களுக்கான வட்டி விகிதம் (2020-21ஆம் ஆண்டு) குறித்த அரசாணை வெளியீடு!
ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரையிலான, ஆல்பாஸ் அறிவிப்பை, சிறப்பு பள்ளி மாணவர்களுக்கும், தனித் தேர்வர்களுக்கும் அமல்படுத்த வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்து உள்ளது. கொரோனா பிரச்னையால், பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் இயங்காததால், மாணவர்களுக்கு பொதுத்தேர்வை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. அதனால், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரையிலான மாணவர்களுக்கு, தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, &'ஆல் பாஸ்&' செய்யப்படுவதாக, முதல்வர் இ.பி.எஸ்., சட்டசபையில் அறிவித்தார். இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டு, கவர்னர் ஒப்புதலுடன் அரசிதழில் வெளியிடப்பட்டது. இந்நிலையில், &'ஆல் பாஸ்&' அறிவிப்பை, தனி தேர்வர்களுக்கும், மாற்றுத்திறன் பள்ளி மாணவர்களுக்கும் அமல்படுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து, கோவை வித்யாவிகாசினி பள்ளி தலைமையாசிரியர் ஜோதி கூறியதாவது: கடந்தாண்டு தொற்று காலத்திலும், மாற்றுத்திறன் உடைய தனித்தேர்வர்கள், தேர்வெழுத வலியுறுத்தப்பட்டது. இந்த ஆண்டும் அரசு, &'ஆல் பாஸ்&' என அறிவித்தாலும், சிறப்பு குழந்தைகளுக்கு அமல்படுத்துவது குறித்து குறிப்பிடப்படவில்லை. ஆண்டு முழுதும் படித்தாலும், இத்தகைய மாணவர்கள், அடுத்த பொதுத்தேர்வு வரை, பாடங்களை நினைவில் வைத்து எழுதுவது, சிரமமாக இருக்கும். எனவே, அவர்களுக்கும் தேர்வு இன்றி, தேர்ச்சி வழங்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
3296 தற்காலிக ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா பணியிடங்களுக்கு 3 மாதங்களுக்கு ஊதிய நீட்டிப்பு ஆணை வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!!
அதேபோல, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனி தேர்வர்களுக்கும், &'ஆல் பாஸ்&' வழங்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews