ராணுவ கல்லுாரியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, March 02, 2021

Comments:0

ராணுவ கல்லுாரியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

ராணுவ கல்லுாரியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. புதுச்சேரி பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் மைக்கேல் பென்னோ விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள இந்திய தேசிய ராணுவ கல்லுாரியில், 1.1.2022ல் சேர்வதற்கு 8 ம் வகுப்பில் பயிலும் மாணவர்களிடம் இருந்து மட்டும், விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நுழைவு தேர்வு எழுதும் மாணவருக்கு 01.01.2022 அன்று பதினொன்னரை வயது குறையாமலும், 13 வயது பூர்த்தியாகாமல் இருக்க வேண்டும்.
TNTEU- Submission of M.Ed. (Semester-I) Research Proposals for 2020 -2022 Batch – Last Date Extended – Reg'
வரும் 05.06.2021 அன்று 9:30 மணி முதல் 11:00 மணி வரை கணிதத் தேர்வும், பிற்பகல் 12.00 மணி முதல் 1.00 மணி வரை பொது அறிவுத் தேர்வு மற்றும் பிற்பகல் 2:30 மணி முதல் 4:30 மணி வரை ஆங்கிலத் தேர்வும் நடக்கும். எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, நேர்முகத் தேர்வு 06.10.2021 அன்று நடக்கும். நேர்முகத் தேர்வுக்குப் பின் தேர்வாகும் மாணவர்கள், ராணுவ மருத்துவ மனைகளில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். புதுச்சேரி மாணவர்களுக்கு, புதுச்சேரியில் எழுத்து தேர்வு நடக்கும். தேர்வு மையம் குறித்த தகவல், இணை இயக்குனர் அலுவலக தேர்வுப்பிரிவில், அஞ்சல் மூலம் அறிவிக்கப் படும். விண்ணப்பப் படிவம் மற்றும் கையேடுகளை www.rimc.gov.in என்ற வலை தளத்தின் மூலமாக பொதுப் பிரிவினர் ரூ. 600க்கும் அட்டவணை இனத்தவர் மற்றும் பழங்குடியினர் அதற்குண்டான ஜாதி சான்றிதழுடன் ரூ.555 கட்டணத் தொகையை செலுத்தி பதிவிறக்கம் செய்யலாம்.
அனைத்து பாடங்களையும் நடத்தி முடிக்க ஆசிரியர்களுக்கு அதிகாரிகள் உத்தரவு!
பூர்த்தி செய்த விண்ணப் பங்கள் வரும் 31ம் தேதிக்குள், இணை இயக்குனர், இரண்டாம் தளம்,பி-பிளாக், காமராஜர் நுாற் றாண்டு கல்வி வளாகம், அண்ணா நகர், புதுச்சேரி என்ற முகவரிக்கு வந்து சேர வேண்டும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews