நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு கொண்டு வருவதை எதிர்த்து சட்டப்போராட்டம்!
தமிழகத்தில் உள்ள அரசு ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்களுக்கு தேவையான சலுகைகளை வழங்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். தேர்தல் பணி:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் தேர்தல் ஆணையமும், முன்னணி அரசியல் கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் பிரச்சாரம், தேர்தல் வாக்காளர் அட்டை சரிபார்ப்பு, வேட்பாளர்கள் அறிவிப்பு போன்ற செயல்கள் காரணமாக அரசியல் களம் தீவிரம் அடைந்துள்ளது.
கற்போம் எழுதுவோம் திட்டத்தில் தேர்வுகளை ரத்து செய்ய கோரிக்கை!
இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் பணியில் அரசு அலுவலர்கள், ஊழியர்கள் என பலர் ஈடுபட உள்ளனர். இதனால் அனைத்து அரசு அலுவலகங்களும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. இது குறித்து அரசு ஆரம்ப்ப பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி மாவட்ட துணை தலைவர் கூறியதாவது, “தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் சில வாரங்களில் நடைபெற உள்ளது. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வும் மே மாதம் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது. எனவே அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் ஊழியர்கள் இரண்டிலும் கவனம் செலுத்தி வருகின்றனர். இதனால் அவர்கள் உடல்சோர்வு மற்றும் மனச்சோர்வு அடைகின்றனர். தேர்தல் பணிகளுக்கான அவர்கள் வேறு பகுதிகளுக்கு சென்று வாக்களிப்பு முடிந்து ஓட்டு பெட்டிகளை எடுத்து செல்ல சில இடங்களில் இரவு காலதாமதம் ஏற்படுகிறது. நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு கொண்டு வருவதை எதிர்த்து சட்டப்போராட்டம்!
எனவே அவர்களுக்கு போக்குவரத்து வசதி செய்து தரவேண்டும். மேலும் அரசு ஊழியர்கள் அவரவர் பணியாற்றும் தொகுதிகளில் தேர்தல் பணி செய்ய அனுமதி வழங்க வேண்டும் அல்லது அவர்கள் பணியாற்றும் வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க அனுமதி வழங்க வேண்டும். அரசு ஊழியர்களில் பணியாற்றும் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், நோயாளிகளுக்கு விதிவிலக்கு வழங்கப்பட வேண்டும்”, இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.