தமிழக அரசு பள்ளிகளில் 1,598 காலிப்பணியிடங்கள் – முன்னாள் படைவீரர்களுக்கு 74 பணியிடங்கள் ஒதுக்கீடு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, March 10, 2021

Comments:0

தமிழக அரசு பள்ளிகளில் 1,598 காலிப்பணியிடங்கள் – முன்னாள் படைவீரர்களுக்கு 74 பணியிடங்கள் ஒதுக்கீடு!

Capture
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்படும் சிறப்பு ஆசிரியர்களுக்கான தேர்வுகளில் முன்னாள் படைவீரர்களுக்கு 74 பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
.com/blogger_img_proxy/பொதுப்பணி, நெடுஞ்சாலைத்துறையில் 531 இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கு தேர்வு: ஏப்ரல் 4ம் தேதி விண்ணப்பிக்கலாம்: TNPSC அறிவிப்பு
ஆசிரியர் தேர்வு வாரியம்:
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 1,598 கைவினை பயிற்றுவிப்பாளர், தையல் ஆசிரியர், இணை ஆசிரியர், உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிகளுக்கான தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது. இதில் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த முன்னாள் படைவீரர்களுக்கு 74 பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களில் சேர ராணுவ வீரர்கள் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று குறிப்பிட்ட சிறப்பு ஆசிரியர் பாடப்பிரிவு பட்டயப் படிப்பில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். இந்த பணிகளுக்கு தகுதியான படைவீரர்கள் மார்ச் மாதம் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள் https://www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
.com/blogger_img_proxy/10 % ஒதுக்கீடு வழங்கி குழப்பம் ஏற்படுத்துவது ஏன்? - அண்ணா பல்கலைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்
தகுதி உடையவர்கள் அதில் விண்ணப்பிக்கலாம். அல்லது இது குறித்து மேலும் விவரங்கள் அறிய ஈரோடு காந்திஜி ரோடு ஜவான்ஸ் பவன் கட்டிடத்தில் உள்ள மாவட்ட முன்னாள் படைவீரர் நல துணை இயக்குனர் அலுவலகத்தை நேரில் அணுகலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews