கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அலகுத்தேர்வு நடைபெற்று வருகிறது.தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால், கடந்த கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதனால் மாணவர்களின் கல்வி, சிந்தனை திறன், எழுதும்பழக்கம் எனஅனைத்தும் கேள்விக்குறியானது.
TN Assembly Election 2021 - Zonal Guide
இதையொட்டி தனியார் பள்ளிகளில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டது. அதேபோல் அரசு பள்ளி மாணவர்களுக்காக, தொலைக்காட்சிகளில் பாடங்கள் நடத்தப்பட்டன.பல மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதாலும், பொதுத்தேர்வுக்கு சில மாதங்களே இருந்ததாலும் மாணவர்கள் நலன் கருதி பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டது. இந்நிலையில் 1 முதல் 11ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள், தேர்வு இல்லை என முதல்வர் அறிவித்தார்.இதில், 1 முதல் 8 ம் வகுப்பு வரை ஆல்பாஸ் என்ற முறை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. குறிப்பாக பத்தாம் வகுப்பு படிக்காமல் பிளஸ் 1 வகுப்பிற்கு செல்லும் போது அடிப்படை தெரியாமல், பாடத்தை தெளிவாக கற்க முடியாது.
ஆசிரியர் மற்றும் பிற பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு.
இதையொட்டி, கள்ளக்குறிச்சி சி.இ.ஓ., முனுசாமி அலகுத்தேர்வு என்ற திட்டத்தை, மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் செயல்படுத்தியுள்ளார். அதாவது, குறைக்கப்பட்ட பாட திட்டத்தில் உள்ள பாடங்களை அலகுகளாக பிரிக்கப்பட்டு,நாள்தோறும் ஒரு பாடத்திற்கு தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான வினாத்தாள் சி.இ.ஓ., அலுவலகத்திலேயே தயார் செய்யப்பட்டு, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இ-மெயில் மூலம் அனுப்பப்படுகிறது. 50 மதிப்பெண்களுக்கு 1.30 மணி நேரம் தேர்வுநடக்கிறது.இந்த அலகுத்தேர்வு மூலம் மாணவர்கள் பாடங்களை கற்பதுடன், தேர்வுகளை கையாளும் முறையினையும் தெரிந்து கொள்கின்றனர். தேர்வு நடைபெறும்நாட்களில் மாணவர்களின் வருகை சதவீதமும்அதிகரிக்கிறது.
Search This Blog
Saturday, March 06, 2021
Comments:0
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அலகு தேர்வு: கல்வித்திறனை அதிகரிக்க புதிய திட்டம்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
84641077
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.