பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் பெண் குழந்தைகளின் கல்வி நிலை குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது.
நாட்டின் வளர்ச்சி:
ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது பல துறைகளிலும் நாடு வளர்ச்சியடைந்துள்ளதை குறிப்பிடும். பெண்களின் கல்வி நிலையை கொண்டும் நாட்டின் வளர்ச்சி விகிதம் குறிப்பிடப்படுகிறது. 2014-2019ம் ஆண்டு வரையிலான கர்நாடகா, அசாம், பீஹார், அருணாசலப்பிரதேசம், திரிபுரா போன்ற மாநிலங்களில் பள்ளி செல்லும் பெண் குழந்தைகளின் இடைநிற்றல் விகிதம் அதிகரித்துள்ளது என்று ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது. பெண் குழந்தைகள் உயர்நிலை கல்வியை முடிப்பதற்கு முன்பாக பள்ளி படிப்பை நிறுத்தி விடும் சூழல் நீடிக்கிறது.
இடைநிற்றல் விகிதம்:
2014-2015ம் ஆண்டில் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய பெண்களின் எண்ணிக்கை 17.79% ஆக இருந்தது. 2015-16-ம் ஆண்டுகளில் இடைநிலைக் கல்வியில் இடைநிற்றல் விகிதம் 16.88% , தொடக்க கல்வி இடைநிற்றல் விகிதம் 4.09% ஆகவும் இருந்திருக்கிறது. 2016-17-ம் ஆண்டில் இந்த சதவீதம் உயர்ந்திருக்கிறது. அந்த கல்வி ஆண்டில் இடை நிலை கல்வி மட்டத்தில் இடைநிற்றல் சதவீதம் 19.81%, தொடக்க கல்வி இடைநிற்றல் 6.34 % ஆக பதிவாகி இருக்கிறது.
மாண்புமிகு தமிழக முதல்வரின் இன்றைய அறிக்கை - 16.02.21 - PDF
2017-18ம் ஆண்டில் இடைநிலைக்கல்வி 18.39%, தொடக்க கல்வி 4.1% ஆகவும் இருந்திருக்கிறது. 2018-19ம் ஆண்டில் இடைநிலை கல்வியை பாதியிலேயே முடித்துக் கொண்டவர்களின் விகிதம் 17.3% ஆகவும், தொடக்க கல்வியை கைவிட்டவர்களின் விகிதம் 4.74 % ஆகவும் உள்ளது. பாதிப்பு ஏற்படுத்தும் காரணிகள்: பெரும்பாலான குழந்தைகள் தொடக்க கல்வியை சிரமமின்றி படித்து விடுகிறார்கள். பெண் குழந்தைகள் உயர்நிலை கல்வியை தொடர்வதில் தான் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.
BEO to HS HM Panel Preparation - DEE Proceedings!
மேலும், பருவம் அடைதல், குழந்தை திருமணம் போன்ற காரணங்கள் பெண் குழந்தைகளின் கல்வியில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. 2020ம் ஆண்டில் மட்டும் தேசிய உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் குழந்தை திருமணத்துக்கு எதிராக 111 வழக்குகள் பதிவு செய்துள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.