கொரோனா தொற்று பரவலுக்கு பின்னர் கல்வி நிலையங்கள் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால் கடலூர் மாவட்ட ஆட்சியர் பள்ளி, கல்லூரிகளில் நேரடியாக ஆய்வு நடத்தினர்.
கொரோனா ஊரடங்கு:
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கு பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் முறையில் கற்பிக்கப்பட்டது. இந்நிலையில் நோய்த்தொற்று சற்று தாக்கம் குறைந்துள்ளதாலும், மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நெருங்கி வருவதாலும் பள்ளி, கல்லூரிகளை திறக்க அரசு அனுமதியளித்தது.
பாதுகாப்பு நடவடிக்கை:
பள்ளிகளை திறக்க அனுமதியளித்தாலும், கல்வி நிலையங்கள் கடைபிடிக்க வேண்டிய நிலையான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, கல்வி நிலையங்கள் அனைத்தும் அரசு வெளியிட்டுள்ள படி, பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்டிப்பாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது வரை 9 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. ஆட்சியர் ஆய்வு:
கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி அவர்கள், நேற்று கடலூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் கந்தசாமி நாயுடு பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேரடியாக ஆய்வு நடத்தினார். அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளாக மாணவ, மாணவிகளுக்கு உடல் வெப்பநிலை சோதிப்பது, ஒரு வகுப்பிற்கு 25 மாணவர்கள் மட்டுமே அமர வைப்பது குறித்து ஆய்வு செய்தார். பாதுகாப்பு நடவடிக்கை பின்பற்றப்படுவது குறித்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.