பொதுத்தேர்வு மாணவர்களுக்கு பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளது போல் மற்ற வகுப்புகளுக்கும் பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக வந்துள்ள தகவலுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
‘லாக்டவுன்’ வகுப்புகள்:
கொரோனா தொற்றின் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. இதனால் மாணவர்களுக்கு பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது. மேலும் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடக்க இருப்பதால் முதல் கட்டமாக அவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. அடுத்ததாக 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடக்கிறது.
பாடங்கள் குறைப்பு:
நடப்பு கல்வியாண்டில் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் மிகவும் குறைவாக நடத்தப்பட்டதால் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு குறித்து மிகவும் கவலையில் ஆழ்ந்தனர். இதனால் தமிழக அரசு மாணவர்களின் மனக்கவலையை குறைக்கும் நோக்கில் 6 முதல் 12ம் வகுப்புக்கான பாடங்களில் இருந்து 30% குறைத்து உள்ளதாக அறிவித்தது. மேலும் குறைக்கப்பட்ட பாடங்களின் படி தான் தேர்வில் கேள்விகள் கேட்கப்படும் என்று அறிவித்தது. பள்ளிக்கல்வி அதிகாரிகள்:
இந்நிலையில் மற்ற வகுப்புகளுக்கான பாடங்களை பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பு மூலமாகவும் அரசு பள்ளிகள் கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் நடத்துகிறது. இந்நிலையில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடங்கள் குறைக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதற்கு பள்ளிக்கல்வி அதிகாரிகள், பெரும்பாலான பள்ளிகள் பாடங்களை முடிக்கும் தருவாயில் உள்ளது. இந்த பாடங்கள் மாணவர்களுக்கு அடுத்த வருட கல்விக்கு அடிப்படையாக இருக்கும். அதனால் அனைத்து பாடங்களையும் நடத்தி, மாணவர்களை மூன்றாம் பருவ தேர்வுக்கு தயார் செய்ய வேண்டும். பாடங்கள் குறைக்கப்படுமா என்பது குறித்த தகவல்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறினார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.