தமிழகத்தின் இடைக்கால பட்ஜெட்டில் குழந்தைகளின் மதிய உணவு திட்டத்திற்கு ரூ.1,953 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னையை தனித்துவம் மிக்க நகரமாக மாற்ற ரூ.3,140 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறைக்கு 229 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அரசு ஊழியர்களுக்கான ஒட்டுமொத்த மருத்துவ காப்பீட்டுத் தொகை 4 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்வு
உயர்கல்விதுறைக்கு 5,478 கோடி ரூபாய், மின்துறைக்கு 7,214 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்துக்கு 300 கோடி ரூபாயும், பயிர்க்கடன் தள்ளுபடிக்காக 5000 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக பட்ஜெட்! எந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு?
அம்மா கிளினிக் திட்டத்திற்கு 144 கோடி ரூபாய், காவல்துறைக்கு 9,567 கோடி ரூபாய், பயிர்காப்பீடு திட்டத்திற்கு 1,738 கோடி ரூபாய், 1,437 கோடி ரூபாய் நீதி நிர்வாகத்திற்கும், 22,218 கோடி ரூபாய் ஊரக வளர்ச்சித்துறைக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்துறைக்கு 19,420 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.