நாடு முழுவதும் 2021ம் ஆண்டுக்கான ஜேஇஇ மெயின் தேர்வுகள் தொடங்கியது!
தமிழகத்தில் 71,766 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 39,941 கோடி ரூபாய் மதிப்பிலான 62 முதலீடுகளை ஈர்த்து 71,766 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பழங்குடியினர் நலனுக்காக ரூ.1,276 கோடியும், ஆதிதிராவிடர் நலனுக்காக ரூ.13,967 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழக உயர்கல்வித்துறைக்காக ரூ.5,478.19 கோடி நிதி ஒதுக்கீடு: துணை முதல்வர் ஓபிஎஸ் அறிவிப்பு
தீயணைப்பு மீட்புத்துறைக்கு ரூ.4,434 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு ரூ.2470 கோடி, கைத்தறி துறைக்கு ரூ.1224 கோடி, கிராமப்புற வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ. 3548, ஊரக சாலை திட்டங்களுக்கு ரூ.440 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.