தமிழக பட்ஜெட்! எந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, February 23, 2021

Comments:0

தமிழக பட்ஜெட்! எந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு?

தமிழகத்தில் வேளாண் துறைக்கு 11,982 கோடி ரூபாய் இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்குவதால் தமிழகத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் சுகாதாரத்துறை, காவல்துறை, வேளாண்துறை உள்ளிட்ட துறைகளுக்கு கடந்த ஆண்டைவிட அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை மாவட்ட வாரியாக - Media-Bulletin - 22.02.2021 - PDF
அதன்படி, கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்காக 6,683 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆய்வு பணிகள் மேற்கொள்ள இருப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. உயர்கல்விதுறைக்கு 5,478 கோடி ரூபாய், மின்துறைக்கு 7,214 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்துக்கு 300 கோடி ரூபாயும், பயிர்க்கடன் தள்ளுபடிக்காக 5000 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அம்மா கிளினிக் திட்டத்திற்கு 144 கோடி ரூபாய், காவல்துறைக்கு 9,567 கோடி ரூபாய், பயிர்காப்பீடு திட்டத்திற்கு 1,738 கோடி ரூபாய், 1,437 கோடி ரூபாய் நீதி நிர்வாகத்திற்கும், 22,218 கோடி ரூபாய் ஊரக வளர்ச்சித்துறைக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Postponement of CMAT-2021 Examinationand Extension of Registration
சுகாதாரத்துறைக்கு 19,420 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெடை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் பன்னீர்செல்வம் 6 முதல் 10ஆம் வகுப்பு வரை கணிப்பொறி அறிவியல் பாடம்!
Postponement of CMAT-2021 Examinationand Extension of Registration
நீதித்துறை நிர்வாகத்துக்கு 1,437 கோடி ரூபாய் ஒதுக்கீடு. 1,580 கோடி ரூபாயில் மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். தமிழக இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரை முழுமையாக புறக்கணிக்க திமுக முடிவு பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்துக்கு 3,700 கோடி ரூபாய் ஒதுக்கீடு * நெடுஞ்சாலை துறைக்கு 18,750 கோடி ரூபாய் ஒதுக்கீடு
தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை மாவட்ட வாரியாக - Media-Bulletin - 22.02.2021 - PDF
காவல் துறைக்கு 9,567 கோடி ரூபாய் ஒதுக்கீடு தீயணைப்பு துறைக்கு 436 கோடி ரூபாய் ஒதுக்கீடு உயர்கல்வித்துறைக்கு ரூ.5,478 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக சுகாதாரத்துறைக்கு ரூ. 19,420 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Postponement of CMAT-2021 Examinationand Extension of Registration
மின் துறைக்கு ரூ. 7, 217 கோடி ஒதுக்கீடு. வேளாண் துறை ரூ. 11,982 கோடி, காவல்துறைக்கு ரூ. 9, 567 கோடி, விவசாயிகளின் பயிர்க்காப்பீடு திட்டத்திற்காக ரூ. 1,738.81 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகல் நலனுக்காக ‘RIGHTS' என்ற சிறப்பு திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசின் பொருளாதார விவகாரத்துறையின் ஆய்வுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. மாற்றுத்திறனாளின் அரசின் திட்டம் உலக வங்கிகள் பரிசீலனையில் உள்ளது. 2021 - 2022 ல் மாற்றுத்திறனாளிகல் நலனுக்காக ரூ.688. 48 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் முதற்கட்டத்தை அமைக்க ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.6,683 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தின் மொத்த வரி வருவாய் ரூ.1,35,641 கோடியாக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை மாவட்ட வாரியாக - Media-Bulletin - 22.02.2021 - PDF
பெட்ரோ, டீசல் மீதான் கூடுதல் வரி வருவாயில் இருந்து மாநிலத்திற்கு உரிய பங்கு கிடைப்பதில்லை. நீர்வள ஆதார திட்டங்களுக்கு ரூ.6,453.17 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 15,900 ஹெக்டேர் அளவில் மரங்களின் பரப்பளவு அதிகரித்துள்ளது. மரங்களின் பல்லுயிர்த் தன்மையில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. சென்னை மாநகரை தனித்தன்மை வாய்ந்ததாக மாற்றும் திட்டத்திற்கு ரூ.3,140 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்திக்கடவு - அவிநாசி வெள்ளக்கால்வாய் திட்டம் இந்தாண்டு டிசம்பரில் முடியும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். கிராமப்புற வீட்டுவசதி திட்டம் - கிராமப்புற வீட்டுவசதி திட்டத்திற்காக ரூ.3,548 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை மாவட்ட வாரியாக - Media-Bulletin - 22.02.2021 - PDF
நீர்பாசனத்துறைக்காக ரூ.6,453 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews