அரசு பள்ளி மாணவர்களுக்கு மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு முகாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, February 15, 2021

Comments:0

அரசு பள்ளி மாணவர்களுக்கு மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு முகாம்

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏனாத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மழைநீர் சேகரிப்பு மற்றும் குடிநீர் பரிசோதனை விழிப்புணர்வு முகாம் ஆர்பிடி பொதுத் தொண்டு நிறுவனம் மூலம் நடைபெற்றது. இந்த முகாமுக்கு தனியார் தொண்டு நிறுவன நிறுவனர் தங்கராஜ் தலைமை தாங்கினார். IFHRMS- Pay roll run for February 2021 - Instructions - PDF

இந்த விழிப்புணர்வு முகாமில் நீர் எவ்வாறு உற்பத்தியாகி, எந்த எந்த நிலைகளை அடைகிறது, நீரின் தன்மைகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர் என்றால் என்ன, அதை எவ்வாறு பாதுகாப்பது. மழைநீர் சேகரிப்பின் அவசியம் என்ன என்பது குறித்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விளக்கங்கள் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டு,மாணவர்களுக்கு எழுது பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தனியார் தொண்டு நிறுவன செயலாளர் பார்வேந்தன், தலைமையாசிரியர் ஜி ஏழுமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews