தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே மாதம் நடக்க உள்ள நிலையில் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் மாதிரி வினாத்தாளை வெளியிட வேண்டும் என்று மாணவர்களும் , பெற்றோர்களும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
பள்ளிகள் திறப்பு தாமதம்:
கடந்த ஆண்டில் ஏற்பட்ட கொரோனா தொற்றின் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கான பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது. மேலும், தொற்றின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டதாலும், மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நெருங்குவதாலும் கடந்த ஜனவரி 19ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. பாடத்திட்டம் குறைப்பு:
நடப்பு கல்வி ஆண்டில் ஏழு மாதங்கள் நேரடி வகுப்புகள் நடக்காததால் மாணவர்கள் பொதுத்தேர்வுகள் குறித்து மிகுந்த கலக்கத்தில் இருந்ததனர். இதனால் மாணவர்களின் மனஅழுத்தத்தை குறைக்கும் வகையில் தமிழக அரசு பாடத்திட்டத்தில் இருந்து குறிப்பிட்ட சதவீதம் குறைத்து அறிவிப்பு வெளியிட்டது.
தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு 27ல் பதவி உயர்வு கவுன்சிலிங்
மேலும், தேர்வுகளில் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் படி தான் கேள்விகள் கேட்கப்படும் என்றும் அறிவித்தது. இந்நிலையில் பாடங்களை முடிப்பதற்காக தமிழகத்தில் ஆறு நாட்கள் தொடர்ந்து பள்ளிகள் இயங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறையும் அறிவுறுத்தியுள்ளது. மாணவர்களின் கோரிக்கை:
12ம் வகுப்பு மாணவர்களுக்கு 35% பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே 3ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடக்க உள்ளதாக கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
பிளஸ் 2 மாணவருக்கு செய்முறை தேர்வு அறிவிப்பு எப்போது?
குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் படி, வினாத்தாள் எவ்வாறு இருக்கும் என்று மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர். இதனால் பொதுத்தேர்வு குறித்தான மாதிரி வினாத்தாளை வெளியிட வேண்டும் என்று மாணவர்களும், ஆசிரியர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.