தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கான நேரடி பயிற்சி வகுப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, February 22, 2021

Comments:0

தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கான நேரடி பயிற்சி வகுப்பு!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் ஆன்லைன் வகுப்புகளில் ஏற்படும் நடைமுறை இடர்பாடுகளை நீக்குவதற்கான பயிற்சி மற்றும் மொழித்திறன் வளர்ப்பதற்கான பயிற்சியும் சேலத்தில் உள்ள மாவட்ட அரசினர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நடந்தது.
ஆன்லைன் வகுப்புகள்:
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டிருந்தது. இதனால் மாணவர்களுக்கான பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது.

பிப்.,22 முதல் பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றம் - இம்மாநில கல்வி அமைச்சர் அறிவிப்பு

தனியார் பள்ளிகள் தங்களது பள்ளியில் படிக்கும் ஆசிரியர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் எடுப்பதற்கான பயிற்சிகளை முன்னதாவே நடத்தி விட்டது. இடர்பாடுகள்:
அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் அவர்களின் ஊர்களில் இருக்கும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மூலமாக இணைய வழியிலேயே நடத்தப்பட்டது. இந்நிலையில் ஆசிரியர்கள் 17.2.2020ம் தேதி முதல் பள்ளிக்கு வர வேண்டும் என்று அரசு உத்தரவிட்டிருந்தது. ஆன்லைன் முறையில் பாடங்கள் எடுப்பதில் உள்ள இடர்பாடுகளை நீக்கும் முறை குறித்து ஆசிரியர்களுக்கு நேரடி பயிற்சிகள் இல்லாததால் ஆசிரியர்கள் சற்று சிரமத்துடன் தான் ஆன்லைன் முறை பாடங்களை கற்பித்து வந்தனர்.

1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 1 முதல் உத்தரபிரதேசத்தில் பள்ளிகள் திறப்பு – பெற்றோர்கள் எதிர்ப்பு!!

பயிற்சி வகுப்பு:
இந்நிலையில் தீக்ஷா என்ற கல்வி செயலியில் ஏற்படும் நடைமுறை இடர்பாடுகளை நீக்க அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சேலம் கெங்கவல்லி ஒன்றியத்தில் சேலம் உத்தமசோழபுரத்தில் உள்ள மாவட்ட அரசினர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் (டயட்) சார்பாக செயல் ஆராய்ச்சி பயிற்சி வகுப்பு நடைபெற்றது. மேலும், நிர்வாகிகள் பலர் தமிழ் மொழித்திறன் வளர்த்தல் குறித்த பயிற்சியை ஆசிரியர்களுக்கு வழங்கினார்கள்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews