பள்ளிகளில் PTA இணைப்பு கட்டணம் - ஆசிரியர்கள் அதிருப்தி! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, February 25, 2021

1 Comments

பள்ளிகளில் PTA இணைப்பு கட்டணம் - ஆசிரியர்கள் அதிருப்தி!

கொரோனாவால் தொடக்க, நடுநிலை பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கான (பி.டி.ஏ.,) இணைப்பு கட்டணத்தை பள்ளிகள் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை தொடர்ந்து ஆசிரியர் தகுதித் தேர்வுக்கும் வயது வரம்பு நிர்ணயம்: பள்ளிக்கல்வித் துறை முடிவால் தேர்வர்கள் அதிர்ச்சி
ஒவ்வொரு ஆண்டும் மாணவரிடம் வசூலிக்கப்படும் பி.டி.ஏ., கட்டணத்தில் இருந்து மாநில பி.டி.ஏ.,விற்கு இணைப்பு கட்டணம் (ஆண்டு சந்தா உட்பட) செலுத்த வேண்டும்.கொரோனாவால் தொடக்க, நடுநிலை பள்ளிகள் இதுவரை செயல்படவில்லை. உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில் மாணவர் வருகை இருந்தாலும் அவர்களிடம் பி.டி.ஏ., கட்டணம் இன்னும் வசூலிக்கவில்லை. இந்நிலையில் 2020-2021க்கு தொடக்க பள்ளிக்கு - ரூ.210, நடுநிலைக்கு - ரூ.285, உயர்நிலைக்கு - ரூ.860, மேல்நிலைக்கு - ரூ.1260 என இணைப்பு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு மார்ச் 1க்குள் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்ச்சியின்றி பணிநியமனம் செய்யப்பட்ட உதவி பெறும் சிறுபான்மைப் பள்ளி ஆசிரியர்களுக்கு அனைத்து பணப்பலன் மற்றும் ஆண்டு ஊதிய உயர்வும் உண்டு என மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறை ஆணை
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது: மாநில அளவில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் இக்கட்டணம் வசூலிக்கப்படும்.இதன் மூலம் துாய்மை மற்றும் வாட்ச்மேன் சம்பளம் உள்ளிட்டவை ஈடுசெய்யப்படும்.இந்தாண்டு இதுவரை கட்டணம் வசூலிக்கவில்லை. ஆனால் உரிய நேரத்தில் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது அதிர்ச்சியாக உள்ளது.கொரோனா பரவலை முன்னிட்டு மாணவர் நலன் கருதி இந்தாண்டு கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்றனர்.

1 comment:

  1. வயது60 ஆக இருக்கட்டும் ஆனால் பணிபுறியும் கால உச்ச வரம்பு 33 வருடமாக குறைக்கலாமே

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews