பகுதிநேர ஆசிரியர் போராட்டத்தால் பள்ளி கல்வி வளாகத்துக்கு பூட்டு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, February 11, 2021

Comments:0

பகுதிநேர ஆசிரியர் போராட்டத்தால் பள்ளி கல்வி வளாகத்துக்கு பூட்டு

பகுதி நேர ஆசிரியர்களின் போராட்டத்தால், பள்ளி கல்வி இயக்குனரக வளாகத்தின் வாயிற் கதவுகளுக்கு பூட்டு போடப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் ஓவியம், இசை, தையல் உள்ளிட்ட சிறப்பு பாடங்களை நடத்த, தற்காலிக அடிப்படையில், பகுதி நேர சிறப்பாசிரியர்கள் பணியாற்றுகின்றனர். தமிழகம் முழுதும், 12 ஆயிரம் பேர் இந்த பணியில் ஈடுபட்டுஉள்ளனர்.

அரசு ஐடிஐயில் விண்ணப்பிக்க கால அவசாகம்: கலெக்டர் தகவல்

வாரந்தோறும் இரண்டு நாட்கள் இவர்களுக்கு வகுப்புகள் ஒதுக்கப்படும்.இந்த ஆசிரியர்களுக்கு மாதம், 7,700 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்ட நிலையில், வரும் மாதங்களில் இருந்து, 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என, முதல்வர் பழனிசாமி., அறிவித்தார். ஆனால், இந்த சம்பள உயர்வை விட தங்களுக்கு பணி நிரந்தரம் தான் வேண்டுமென கோரி, பகுதி நேர ஆசிரியர்கள் சங்கத்தினர், சென்னை டி.பி.ஐ., வளாகத்தில், ஒரு வாரத்துக்கு மேலாக போராட்டம் நடத்துகின்றனர். அவர்களுடன் அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகின்றனர்.

6,7,8-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை.: அமைச்சர் செங்கோட்டையன்

இந்நிலையில், போராட்டம் நடத்தும் ஆசிரியர்கள், திடீரென சாலை மறியலில் ஈடுபட வாய்ப்புள்ளதாக, போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனால், டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள இரண்டு வாயிற் கதவுகளை போலீசார் பூட்டி விட்டனர்.ஒரு நுழைவு வாயிலுக்கு மட்டும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, கதவு திறக்கப்பட்டுள்ளது. போராட்டம் முடியும் வரை, இந்த நிலை தொடரும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews