கூட்டுறவு வங்கிகளில் 6 சவரன் வரை விவசாயிகள் வாங்கிய கடன் தள்ளுபடி : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, February 26, 2021

Comments:0

கூட்டுறவு வங்கிகளில் 6 சவரன் வரை விவசாயிகள் வாங்கிய கடன் தள்ளுபடி : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.

கூட்டுறவு வங்கிகளில் 6 சவரன் வரை விவசாயிகள் பெற்ற கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.இந்த அறிவிப்பின் மூலம் 16 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன் அடையப் போகிறார்கள் என்றும் அவர் தனது உரையில் தெரிவித்தார்.
DGE - மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு - மே -2021 - தனித் தேர்வர்கள் சேவை மையங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிப்பது சார்ந்த அறிவுரைகள் அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியீடு
சட்டசபையில் 110வது விதியின் கீழ் இன்று எடப்பாடி பழனிச்சாமி இந்த அறிவிப்பை வெளியிட்டதை கேட்டதும் அவை உறுப்பினர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வறட்சி, காலம் தவறிய மழை, வெள்ளம் போன்ற பல்வேறு இயற்கை பேரிடர்களை விவசாயிகள் சந்தித்து வருகிறார்கள். கடந்த ஆண்டை பொறுத்தவரை, கொரோனா பெருந்தொற்றால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. மேலும் கடந்த ஆண்டு நிவர் புயல் உள்ளிட்ட புயல்களாலும், கடந்த மாதம் பருவம் தப்பி பெய்த மழையினாலும் விவசாயிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
பள்ளிக் கல்வி – இந்திய நீர்வளத்துறை என்ற தலைப்பில் ஆசிரியர்களுக்கான தொலைதூரக் கல்வித் திட்டம் - இணையவழி பயிற்சியில் கலந்து கொள்ளலாம் - DSE Proceedings
எனவே விவசாயிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பு அவர்களுக்கு இந்த அறிவிப்பு மிகப்பெரிய மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் கொடுத்துள்ளது. விவசாய சங்கத்தின் தலைவர்கள் பலரும் முதல்வர் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews