குடிமை பணி தேர்வுக்கு 'யு டியூப் சேனல்' வழியே இணைய வழி வகுப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, February 18, 2021

Comments:0

குடிமை பணி தேர்வுக்கு 'யு டியூப் சேனல்' வழியே இணைய வழி வகுப்பு!

'அகில இந்திய குடிமைப் பணிகள், முதல் நிலை தேர்வுக்கான, இணைய வழி வகுப்புகள், 'யு டியூப் சேனல்' வழியே நடத்தப்படுகின்றன' என, அகில இந்திய குடிமைப் பணி தேர்வு பயிற்சி மையத் தலைவர், இறையன்பு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:சென்னை பசுமை வழிச்சாலையில், அகில இந்திய குடிமைப் பணி தேர்வு பயிற்சி மையம், 54 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த மையம் சார்பில், தமிழக இளைஞர்கள் பயன்பெறும் வகையில், அகில இந்திய குடிமைப் பணிகள், முதல்நிலை தேர்வுக்கு, இணைய வழி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தினமும் காலை, 10:15 முதல், 11:30 மணி; 11:45 முதல், 1:00 மணி; பகல், 2:00 முதல், பிற்பகல், 3:15 மணி; மாலை, 3:30 முதல், 4:45 வரை, நான்கு பாடங்கள் நடத்தப்படுகின்றன.முதல் நிலை பாடத்திட்டம் அடிப்படையில், இந்திய வரலாறு, தேசிய விடுதலை போராட்டம், புவியியல், அரசியல், பொருளாதாரம், அறிவியல், சுற்றுச்சூழல், நடப்பு நிகழ்வுகள் போன்ற தலைப்புகளில், பாடங்கள் நடத்தப்படுகின்றன.

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேவை

ஆர்வம் உள்ள மாணவர்கள், நேரடி இணைய வழி வகுப்பு மற்றும், 'AICSCC TN' என்ற, 'யு டியூப் சேனல்' வழியே படித்து பயன் பெறவும். பணிக்கு செல்வோரும், பிற மாநிலங்களில் வசிக்கும் தமிழர்களும், தங்கள் ஓய்வு நேரத்தில் பார்த்து பயன்பெற முடியும். நேரடி பயிற்சி நேரடி பயிற்சி வகுப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு, ஜன., 24ல், 16 மையங்களில் நடந்தது. இதில், 3,956 பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள், இம்மாதம், 12ம் தேதி வெளியாகின. பயிற்சி மையத்தில் சேர்த்துக் கொள்ளப்பட உள்ளவர்கள், தேர்வு பட்டியல் மற்றும் சேர்க்கை அட்டைகளை, 'www.civilservicecoaching.com' என்ற, இணையதளத்தில், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

SMC/SMDC பயிற்சியில் பங்கேற்ற உறுப்பினர்களுக்கு மதிப்பூதியம் விடுவித்து இயக்குனர் செயல்முறைகள் - PDF

சேர்க்கைக்கு வருவோர், பிப்ரவரி, 20 அல்லது அதற்கு பின், கொரோனா பரிசோதனை செய்து, கொரோனா இல்லை என்ற சான்றிதழை, கட்டாயம் சமர்பிக்க வேண்டும். சான்றிதழ் சரி பார்ப்பு, 22ம் தேதி முதல், 25 வரை, வெவ்வேறு பிரிவினருக்கு நடத்தப்படும்.இவ்வாறு, இறையன்பு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews