1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 1 முதல் உத்தரபிரதேசத்தில் பள்ளிகள் திறப்பு – பெற்றோர்கள் எதிர்ப்பு!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, February 21, 2021

Comments:0

1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 1 முதல் உத்தரபிரதேசத்தில் பள்ளிகள் திறப்பு – பெற்றோர்கள் எதிர்ப்பு!!

உத்தரபிரதேச மாநிலத்தில் மார்ச் 1ம் தேதி முதல் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதாக வெளியான மாநில பள்ளிக்கல்வித்துறையின் அறிவிப்புக்கு பெற்றோர்கள் தரப்பிலிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. உயர் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு:
உத்தரபிரதேசத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டது. தொற்றின் தாக்கம் சற்று குறைந்துள்ளதால் கடந்த மாதம் முதல் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது.

நடுநிலைப் பள்ளித்தலைமையாசிரியர் பதவியிலிருந்து வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கான விண்ணப்பம்

இந்நிலையில் கடந்த 5ம் தேதி மாநில கல்வித்துறை 1 முதல் 5ம் வகுப்புகளுக்கான பள்ளிகள் மாநிலத்தில் மார்ச் 1ம் தேதி முதல் திறக்கப்படும் என்று அறிவித்தது. அரசின் இந்த அறிவிப்புக்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. பள்ளிகளின் தரப்பு:
அரசின் இந்த முடிவுக்கு பள்ளிகளின் தரப்பில் இருந்து பதில் கூறப்பட்டுள்ளது. அதில், நாங்கள் 1-5ம் வகுப்புக்கு பள்ளிகளை திறப்பதற்கு அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்ற தயராக உள்ளோம். ஆனால் பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்டு அதன் பின்னர் முடிவை அறிவிப்போம் என்று கூறுகின்றனர்.

உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்குத் தடை கோரிய வழக்கில் சென்னை உயர்நீதி மன்ற மதுரைக்கிளை தடை வழங்கிய Stay order COPY

பெற்றோர்களின் கருத்து:
பெற்றோர்களை பொறுத்த வரையில் பாதி மக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறுகின்றனர். பாதி மக்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப விருப்பம் இல்லை என்று கூறுகின்றனர். ஒரு சிலர், புதிய கல்வியாண்டு ஏப்ரல் மாதத்தில் தொடங்க உள்ள நிலையில் மார்ச் மாதத்தில் பள்ளிகளை திறக்க வேண்டாம் என்று கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews