அரசின் இலவச ‘நீட்’ பயிற்சி வகுப்புக்கு மாணவர்கள் வருகை குறைவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, February 12, 2021

Comments:0

அரசின் இலவச ‘நீட்’ பயிற்சி வகுப்புக்கு மாணவர்கள் வருகை குறைவு

அரசின் இலவச ‘நீட்’ பயிற்சி வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
Attendance-at-the-government%2527s-free-%2527Need%2527-training-class-is-low
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இந்தஆண்டு கரோனா பரவலால் இணையவழியில் ‘நீட்’ பயிற்சிவகுப்புகளை நடத்த பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்தது.இதற்காக இ-பாக்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் நீட் பயிற்சியில் பங்கேற்க 28 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்திருந்தனர். பயிற்சி வகுப்புகள் கடந்த நவ.9-ம் தேதி தொடங்கியது.

பொது தேர்வு விபரம் பதிவேற்ற பள்ளிகளுக்கு அவகாசம்

இந்நிலையில், நீட் பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து பள்ளிக்கல்வி அதிகாரிகள் சிலர் கூறியதாவது: இந்த ஆண்டு நீட் பயிற்சிக்கு 28 ஆயிரத்துக்கும் மேலான மாணவர்கள் பதிவு செய்த நிலையில், தற்போது சராசரியாக 3,500 பேர்மட்டுமே வகுப்புகளில் கலந்துகொள்கின்றனர். பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க மாணவர்களை கட்டாயப்படுத்த முடியாது.
IMG-20210212-WA0058
மருத்துவக் கல்வியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்தி, பயிற்சி வகுப்புகளில் பங்கேற்கவைக்க பள்ளி தலைமையாசிரியர்கள் மூலம் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தபயிற்சியானது நடப்பு கல்வியாண்டுக்கான (2020-21) ‘நீட்’ தேர்வுக்கு முந்தைய வாரம் வரைவழங்கப்படும்.

9, 11ம் வகுப்பு தேர்வுகள்; சி.பி.எஸ்.இ., அறிவிப்பு

இந்த ஆண்டு முதல் வருடத்துக்கு 2 முறை ‘நீட்’தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. எனவே, இந்த நல்வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84597117