பொது தேர்வு விபரம் பதிவேற்ற பள்ளிகளுக்கு அவகாசம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, February 12, 2021

Comments:0

பொது தேர்வு விபரம் பதிவேற்ற பள்ளிகளுக்கு அவகாசம்

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 பொதுத் தேர்வுக்காக, மாணவர் விபரங்களை பதிவு செய்வதற்கான அவகாசத்தை நீட்டித்து, அரசு தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.


இடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியர் ஆங்கில பாடத்திற்கு தகுதிவாய்ந்தவர்களின் முன்னுரிமைப் பட்டியல் - SGT - PET - SPL TR TO BT ASST (ENGLISH SENIORITY LIST) - 01.01.2021 அன்றைய நிலவரப்படி - PDF

தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விபரங்களை, பள்ளிகள் வழியாக அரசு தேர்வு துறைசேகரித்துள்ளது.அதேபோல, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவர்களின் விபரங்களை, பிப்., 1 முதல் இன்றைக்குள் ஆன்லைனில் பதிவு செய்யுமாறு, அரசு தேர்வுத் துறைஅறிவுறுத்தியது.பெரும்பாலான பள்ளிகள், இந்த பணிகளை முடிக்கவில்லை.

மாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய்ய நடவடிக்கை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

நேற்று கடைசி நாளாக இருந்த நிலையில், பெரும்பாலான பள்ளிகள் மாணவர் விபரங்களை பதிவேற்றுவது, தேர்வு கட்டணம் செலுத்துவது போன்ற நடைமுறைகளை முடிக்க முடியாத நிலைஏற்பட்டது.இந்நிலையில், தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம், ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, அரசு தேர்வுத் துறை இயக்குனர் உஷாராணி அனுப்பியுள்ள சுற்றறிக்கை:சில பள்ளிகளில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விபரங்களை, இணையதளத்தில் பதிவேற்றுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

PG TRB Exam 2021 Announcement - Direct Recruitment for the post of Post Graduate Assistants / Physical Education Directors Grade-I - Notification -PDF

எனவே, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான விபரங்களை, இணையதளம் வழியே பள்ளிகள் தரப்பில் பதிவேற்றம் செய்வதற்கும், கட்டணம் செலுத்துவதற்கும் வரும், 18ம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கப்படுகிறது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews