பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கும் விரைவில் பள்ளிகள் திறக்கப்படும். இந்த வகுப்புகளுக்கு 50 சதவீதம் பாடத்திட்டம் குறைக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த 9 மாதங்களாக மூடிக்கிடந்த பள்ளிகள் படிப்படியாக தற்போது திறக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்பட்டன. அவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்த வேண்டியுள்ளதால், அதற்கேற்ப 40 சதவீத பாடப் பகுதிகள் குறைக்கப்பட்டன.
கணினி ஆசிரியர் தேர்வு முறைகேடு புகார்!: அனைத்து தேர்வு மையத்திலும் விரிவான விசாரணை நடத்த ஐகோர்ட் ஆணை இதையடுத்து, 8ம் தேதி முதல் 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகள் தொடங்கப்பட்டன. அவர்களுக்கு தற்போது குறைக்கப்பட்ட பாடப்பகுதிகள் நேற்று காலையில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், விரைவில் 6 முதல் 8ம் வகுப்புகளும் தொடங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களுக்கான பாடப்பகுதியில் 50 சதவீதம் குறைக்கவும் பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்த பணி முடிந்தவுடன், 6 முதல் 8ம் வகுப்புகள் தொடங்கப்படும். இதையடுத்து, 6 முதல் 8 வரை உள்ள வகுப்புகள் தொடங்குவது குறித்து முதல்வர் விரைவில் அறிவிப்பார் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ்மொழி மீதான மத்திய அரசின் ஒடுக்குமுறை தொடர்ந்தால் தமிழகத்தில் மீண்டும் மொழிப்போர் வெடிக்கும்: சீமான் எச்சரிக்கை

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.