Breaking

Thursday, February 18, 2021

10ம் வகுப்பு, பிளஸ் 1 தேர்வு எப்போது?

பத்து மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, ஜூனில் பொதுத் தேர்வு நடத்தப்படலாம்&' என, பள்ளிக் கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான கால அட்டவணையை, பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மே 3 முதல், 21 வரை, பிளஸ் 2 தேர்வு நடக்கிறது. அதனால், 10 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, பொதுத் தேர்வு எப்போது நடத்தப்படும் என, மாணவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

26 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள் விரைவில் பதவி உயர்வு மூலம் நிரப்பும் பொருட்டு சார்ந்த அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் விபரங்களை சரிபார்த்து அனுப்ப பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு

பிளஸ் 2வை பொறுத்தவரை பலர், &'நீட்&' மற்றும் ஜே.இ.இ., போன்ற நுழைவுத் தேர்வுகளை எழுத உள்ளதால், அவர்களுக்கு, மே மாதத்துக்குள் பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது.அதேநேரம், பிளஸ் 1 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு, ஜூனில் தேர்வு நடத்தப்படலாம் என, தெரிகிறது. இந்த ஆண்டு தாமதமாக பாடங்கள் நடத்தியுள்ளதால், கல்வி ஆண்டை, ஜூன் வரை நீட்டிக்க வாய்ப்பு உள்ளது.

நியமிக்கப்பட்ட தற்காலிக ஆசிரியர்களை நிரந்தர பணியில் அமர்த்த முடியாது.: அமைச்சர் செங்கோட்டையன்

எனவே, பிளஸ் 1 பொதுத் தேர்வு ஜூனில் நடத்தப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதி முடிவாகி விட்டால், மே இறுதி வாரத்தில் தேர்வு துவங்கப்பட்டு, ஜூன் இரண்டாம் வாரத்தில் முடிக்கப்படலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog