கல்லுாரி உதவி பேராசிரியர் பணிக்கான யு.ஜி.சி., நெட் தேர்வு, ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கியது.
கல்லுாரி உதவி பேராசிரியர் பணி மற்றும் இளநிலை ஆய்வாளர் உதவித்தொகை பெறுவதற்கு யு.ஜி.சி., நெட் தேர்வை ஆண்டுக்கு இரு முறை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. நடப்பாண்டுக்கான தேர்வு அறிவிப்பை தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் வெளியிட்டு உள்ளது.
யு.ஜி.சி., நெட் தேர்வு வரும் மே 2ம் தேதி துவங்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.மே 3 முதல் 17 வரை பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு தேர்வு நடக்க உள்ளது. காலை, 09.00மணி முதல் மதியம் 12 மணி வரை முதல் தாள், பிற்பகல், 3 மணி முதல், மாலை, 06.00 மணி வரை இரண்டாம் தாள் தேர்வு நடத்தப்பட உள்ளது.ஆன்லைன் வாயிலாக தேர்வு நடத்தப்படுகிறது. ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முன்தினம் துவங்கியது; மார்ச் 2ம் தேதி கடைசி நாள். இதுதொடர்பான மேலும் தகவலுக்கு, www.nta.ac.in, https://ugcnet.nta.nic.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது
Search This Blog
Thursday, February 04, 2021
Comments:0
யு.ஜி.சி., 'நெட்' தேர்வு அறிவிப்பு ஆன்லைன் விண்ணப்பம் துவக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.