Breaking

Friday, February 05, 2021

இன்ஜி., கல்லூரிகள் 8ம் தேதி திறப்பு

தமிழக அரசின் அனுமதியை தொடர்ந்து, வரும், 8ம் தேதி முதல், இன்ஜினியரிங் கல்லுாரிகளை திறக்க, அண்ணா பல்கலை உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தொற்று பெருமளவு கட்டுக்குள் வந்துள்ளதால், கல்வி நிறுவனங்களை படிப்படியாக திறக்க, தமிழக அரசு அனுமதி அளித்து வருகிறது. இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பில் இறுதியாண்டு மாணவர்களுக்கு, டிச., 7 முதல் கல்லுாரிகள் திறக்கப்பட்டன. இதையடுத்து, அனைத்து வகை கலை, அறிவியல், சட்டம், மீன்வள கல்லுாரிகள் மற்றும் பாலிடெக்னிக்குகளை, 8ம் தேதி முதல் திறக்க, முதல்வர் இ.பி.எஸ்., அனுமதி அளித்தார்.அதன் அடிப்படையில், இன்ஜினியரிங் கல்லுாரிகளை, 8ம் தேதி முதல் திறக்க, அண்ணா பல்கலை உத்தரவிட்டுள்ளது. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, 8ம் தேதியும், இரண்டாம் ஆண்டுக்கு, மார்ச், 15; மூன்றாம் ஆண்டுக்கு ஏப்., 5லும் கல்லுாரிகள் திறக்கப்படுகின்றன. பி.ஆர்க்., - எம்.ஆர்க்., படிப்பு மற்றும் முதுநிலை படிப்புகளில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, 8ம் தேதி; இரண்டாம் ஆண்டுக்கு மார்ச், 15; மூன்றாம் ஆண்டுக்கு ஏப்., 19லும் நேரடி வகுப்புகள் துவங்கும்.இந்த வகுப்புகளை அரசின் வழிமுறைகளை பின்பற்றி நடத்த வேண்டும். மாணவர் விடுதிகளையும் தயார் செய்து, மாணவர்கள் தங்குவதற்கு கல்லுாரிகள் அனுமதிக்கலாம் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog