தனியார் இன்ஜினியரிங் கல்லுாரி, உதவி பேராசிரியர் தற்கொலை தொடர்பாக, அறிக்கை தாக்கல் செய்யும்படி, உயர் கல்வி செயலருக்கு, மனித உரிமை கமிஷன், 'சம்மன்' அனுப்பியுள்ளது.
திருச்சியைச் சேர்ந்த பேராசிரியர் கார்த்திக், தேசிய மனித உரிமை கமிஷனில், புகார் ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:திருச்செங்கோட்டில் உள்ள விவேகானந்தா தொழில்நுட்ப மகளிர் கல்லுாரியில் பணியாற்றிய, 53 வயது உதவி பேராசிரியர் ரவி, 2020 மார்ச்சில், சம்பள பிரச்னையால் தற்கொலை செய்து உள்ளார்.
சம்பள பிரச்னையால், தனியார் இன்ஜி., கல்லுாரி பேராசிரியர் தற்கொலை செய்வது, இது இரண்டாவது சம்பவம். இது குறித்து விசாரிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு தொடர்பாக, தமிழக உயர் கல்வி முதன்மை செயலர் மற்றும் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர், மார்ச், 26ல், விளக்க அறிக்கையுடன் நேரில் ஆஜராக வேண்டும் என, தேசிய மனித உரிமை கமிஷன் உத்தரவிட்டு உள்ளது.
Friday, February 05, 2021
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.