துணைவேந்தர் சுரப்பாவுக்கு சம்மன் அளித்து விசாரணை நடத்த, அண்ணா பல்கலை பேராசிரியர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, ஏ.யு.டி.ஏ., என்ற அண்ணா பல்கலை ஆசிரியர்கள் சங்கத் தலைவர் அருள் அறம் மற்றும் செயலர் சந்திரமோகன் வெளியிட்ட அறிக்கை:அண்ணா பல்கலை துணைவேந்தர் சுரப்பா மீது, அடிப்படை ஆதாரம் அற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த பொய் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க, தமிழக அரசு சார்பில், விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆணையம், துணைவேந்தர் சுரப்பாவுக்கு சம்மன் அளித்து, அவரிடம் விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.பல்கலையின் துணைவேந்தர் என்ற உயர்ந்த கவுரவமிக்க பதவியில் உள்ளவரை, விசாரணை ஆணையம் விசாரிக்க முடிவு செய்திருப்பது தவறான முன்னுதாரணமாக இருக்கும்; அண்ணா பல்கலையின் புகழுக்கு களங்கள் விளைவிப்பதாக இருக்கும்.
விசாரணை ஆணைய நடவடிக்கைகளுக்கு தடை கேட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்கலையின் துணைவேந்தர் சுரப்பா மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில், அண்ணா பல்கலை ஆசிரியர் சங்கமும் மனுதாக்கல் செய்து, தன்னை இணைத்து கொண்டுள்ளது.இந்த வழக்கில், விரைவில் நியாயமான தீர்ப்பு வழங்கப்படும் என, எதிர்பார்க்கிறோம்.
எனவே, நீதிமன்றத்தின் விசாரணையில், துணைவேந்தர் தன் கருத்துகளை கூறுவதற்கு, விசாரணை ஆணையம் வாய்ப்பளிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
Search This Blog
Saturday, January 23, 2021
Comments:0
துணைவேந்தர் சுரப்பாவை விசாரிக்க பேராசிரியர்கள் எதிர்ப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.