தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்.! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, January 13, 2021

2 Comments

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்.!

கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாத இறுதி முதல் நாடுமுழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் உள்ளது. தற்போது பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தாலும், பள்ளிகள், கல்லூரிகள் இன்னும் பல மாநிலங்களில் திறக்கப்படவில்லை.
இதற்கிடையே, பாதுகாப்பு வழிமுறைகளுடன் பள்ளிகள், கல்லூரிகளைத் திறக்க மத்திய அரசு அனுமதித்துள்ளது. நாட்டின் ஒரு சில மாநிலங்களில் பள்ளிகள்- கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன. கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்குக் கடந்த 1-ம் தேதி முதல் கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டது. தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் வரும் 19 ஆம் தேதிமுதல் திறக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிலையில், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார். 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் நேற்று ஆணை பிறப்பித்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பள்ளிக்கு வரலாம். 98 சதவீத மாணவர்கள் பள்ளிக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளனர் எனக் கூறினார்.

2 comments:

  1. பள்ளிகள் திறப்பது குறித்து வரவேற்க வேண்டிய விஷயம் தான். ஆனால், பாதுகாப்பு குறித்து அமைச்சர்களும், கல்வித்துறை அதிகாரிகளும்,முழுமையாக விளக்கம் அளித்தால் நாங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பலாம் என்று முடிவு செய்ய முடியும். அவர்களுடைய எதிர்காலத்தை நாங்கள் மனதில் வைத்துதான் இதையும் வலியுறுத்துகிறோம்.

    ReplyDelete
  2. Sutha poi .ellarum vena nu solranga sengottaiyan sir please unmaiya pesunga

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews