DSE - 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் ஆரம்ப கற்றல் நிலை மதிப்பீடு (Initial Learning Level Assessment ) - EMIS இணையதளம் மூலம் நடத்துதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, January 21, 2021

Comments:0

DSE - 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் ஆரம்ப கற்றல் நிலை மதிப்பீடு (Initial Learning Level Assessment ) - EMIS இணையதளம் மூலம் நடத்துதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் ஆரம்ப கற்றல் நிலை மதிப்பீடு (Initial Learning Level Assessment ) COVID 19 பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் 19.01.2021 அன்று முதல் 10 - ம் வகுப்பு மற்றும் 12 - ம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன . பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையிலும் மாணவர்களின் கற்றல் அடைவு பாதிக்காத வண்ணம் பள்ளிக் கல்வித் துறை பல முன்முயற்சிகளை மேற்கொண்டது .
அரசு வழங்கிய விலையில்லா மடிக்கணினிகளில் காணொலிகள் பதிவேற்றம் , கல்வித் தொலைக்காட்சி மற்றும் சில தனியார் தொலைக்காட்சிகளில் பாடம் சார்ந்த காணொலிகள் ஒளிபரப்பு செய்தல் , விரைவு குறியீடுகளுடன் கூடிய பாடப்புத்தங்களை உரிய நேரத்தில் வழங்குதல் போன்ற முன்னெடுப்புகளின் மூலம் மாணவர்களின் கற்றல் அடைவுக்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன . தற்போது 10 - ம் வகுப்பு மற்றும் 12 - ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் , மாணவர்கள் இது வரை எந்த அளவுக்கு அடைவுத்திறன் பெற்றுள்ளார்கள் என்று அறிந்துகொண்டு , அதன் அடிப்படையில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் அவர்களுக்கு எந்தெந்தப் பகுதிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று ஆசிரியர்கள் திட்டமிடும் பொருட்டு ஆரம்ப கற்றல்நிலை மதிப்பீடு மேற்கொள்ள மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறவனத்தால் திட்டமிடப்பட்டுள்ளது. CLICK HERE TO DOWNLOAD Full Proceedings PDF

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews