தமிழகத்தில், 35 நடுநிலை பள்ளிகளை, அரசு உயர்நிலை பள்ளிகளாகவும், 40 உயர்நிலை பள்ளிகளை, மேல்நிலை பள்ளிகளாகவும், தரம் உயர்த்தி, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
முதல்வர் இ.பி.எஸ்., சட்டசபையில் அறிவித்தபடி, 35 ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி நடுநிலை பள்ளிகள், அரசு உயர்நிலை பள்ளிகளாக, தரம் உயர்த்தப்பட்டு உள்ளன.
ஒரு பள்ளிக்கு இரண்டு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம், 70 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றில், தரம் உயர்த்தப்படும் நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும், பட்டதாரி ஆசிரியர்களில், உயர்நிலை பள்ளியில் சேர விருப்பமுள்ள ஆசிரியர்களை சேர்த்துக் கொள்ளவும், இதர பணியிடங்களை, பணி நிரவல் வழியே நிரப்பவும், அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நிலையிறக்கம் செய்யப்படும், முதல் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரையுள்ள, தொடக்கப் பள்ளிகளுக்கு, பள்ளி ஒன்றுக்கு ஒரு தலைமை ஆசிரியர் பணியிடம் வீதம், 35 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படுகின்றன. அதேபோல, நடப்பு கல்வியாண்டில், 40 அரசு, நகராட்சி உயர்நிலை பள்ளிகள், மேல்நிலை பள்ளிகளாக, தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிலை உயர்த்தப்படும். இதற்கான அரசாணையை, பள்ளிக் கல்வித்துறை செயலர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ளார். அரசாணையுடன் தரம் உயர்த்தப்பட்ட, பள்ளிகள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
Search This Blog
Thursday, January 21, 2021
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.