11 ஆவது ஊதிய ஆணையை அறிக்கை கேரள முதல்வரிடம் நாளை ஒப்படைப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, January 28, 2021

Comments:0

11 ஆவது ஊதிய ஆணையை அறிக்கை கேரள முதல்வரிடம் நாளை ஒப்படைப்பு

11வது ஊதிய ஆணைய அறிக்கை கேரள முதல்வரிடம் நாளை ஒப்படைப்பு
திருவனந்தபுரம், ஜன.28-

கேரள அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான 11வது ஊதிய ஆணைய அறிக்கை நாளை முதல்வர் பின ராயி விஜயனிடம் ஒப்படைக்கப்படுகிறது. இதில் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் 23 ஆயிரம் முதல் 24 ஆயிரம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல ஓய்வூதிய வயதை உயர்த்துவதற்கான திட்டமும் வழக்கம்போல் இருக்கும். திருத்தப்பட்ட சம்ப ளம், ஓய்வூதியம் மற்றும் டிஏ நிலுவைத்தொகையை வழங்க பட்ஜெட்டில் கூடுதலாக 115 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. கடந்த முறை குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் 117 ஆயிரமாகவும், அதிகபட்ச அடிப்படை சம்பளம் ரூ.1.20 லட்சமாகவும் இருந்தது. இந்த முறை அதிகபட்ச அடிப்படை சம்பளம் 1.5லட்சம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிதி நெருக்கடியைகருத்தில் கொண்டு ஊதிய உயர்வை பரிந்துரைக்குமாறு அரசு ஆணையத்திடம் கோரியிருந்தது. ஏப்ரல் முதல் ஓய்வூதியம், சம்பளம், சேமநல நிதி உள்ளிட் டவை அதிகரித்து வழங்கப்படும். தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்பு அடுத்த மாதம் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews