மகாராஷ்டிரா மாநிலத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி முதல் நடைபெறும் என அம்மாநில பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு:
இந்தியாவில் உள்ள பள்ளிகள் அனைத்தும் கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. பள்ளிகள் திறப்பது குறித்து மத்திய அரசு மாநில அரசின் விருப்பத்திற்கு ஏற்ப முடிவு செய்து கொள்ள அனுமதி அளித்தது. இதன்படி பல மாநிலங்களில் உள்ள பள்ளிகள் ஜனவரி 4-ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பை மகாராஷ்டிரா கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 23ஆம் தேதி முதல் மே 29 ஆம் தேதி வரையும், 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 29ஆம் தேதி முதல் மே 31 வரை பொதுத்தேர்வு நடக்கவுள்ளது.
மேலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு குறித்தும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் 22 வரையிலும், 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 9 முதல் 28 வரையிலும் செய்முறை தேர்வுகள் நடத்தப்பட உள்ளன என மகாராஷ்டிரா பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வர்ஷா தெரிவித்துள்ளார். மேலும் பொதுத்தேர்வுகளுக்கான முடிவுகள் ஜூலை இறுதி அல்லது ஆகஸ்ட் துவக்கத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Friday, January 22, 2021
10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை 2021 – மகாராஷ்டிரா மாநில அரசு வெளியீடு!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.