பெங்களூரு மாநகர போக்குவரத்துக்கழகம் சார்பில் கல்லூரி மாணவர்கள் இலவசமாக பேருந்துகளில் பயணம் செய்ய இலவச பேருந்து அட்டைகள் வழங்கப்படுகின்றன. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் பெங்களூரு ஒன் மையங்களில் காலை 8 மணி முதல் மாலை 6.30 மணி வரை அட்டைகளை வாங்கிக் கொள்ளலாம் என மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரி மாணவர்களுக்கான பேருந்து அட்டை:
2020-21 ஆம் ஆண்டுக்கான சலுகை கட்டணம் மற்றும் இலவச பேருந்து அட்டைகள் பள்ளி, பியூ கல்லூரி மாணவர்கள், தொழிக்கல்வி, தொழிநுட்பக்கல்வி, மருத்துவக் கல்லூரி, மாலைநேரக் கல்லூரி மாணவர்கள் பேருந்து அட்டை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.
இதனை பெறுவதற்கு மாணவர்கள் இணையதளம் மூலமாக தங்களது கல்லூரி அடையாள அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை, பேருந்துகளில் கேட்கப்படும் கட்டணம், உள்ளிட்ட விவரங்களை பதிவிட்டால் ஸ்மார்ட் கார்ட் மாதிரியான பேருந்து அட்டைகளளை பெங்களூரு ஒன் மையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
அவ்வாறு பெற முடியாத மாணவர்கள் பழைய அட்டைகளை பயன்படுத்தி பயணம் செய்யலாம். ஆரம்ப பள்ளி மாணவர்கள், நடுநிலைப் பள்ளி மாணவர்கள், உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் என தனித்தனியாக பேருந்து அட்டைகள் வழங்கப்படும். மாணவர்களுக்கு உதவும் வகையில் பெங்களூரு ஒன் மையங்கள் அதனை செயல்படுத்த உதவ வேண்டும். அதற்கு அவர்கள் மாநகர போக்குவரத்து கழகத்தில் முன்பதிவு செய்திருக்க வேண்டும் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Friday, January 22, 2021
கல்லூரி மாணவர்களுக்கு இலவச பேருந்து அட்டை- போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு
STUDENTS
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.