டி.என்.பி.எஸ்.சி., அட்டவணை வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, December 17, 2020

Comments:0

டி.என்.பி.எஸ்.சி., அட்டவணை வெளியீடு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசு பணிகளுக்கான, 42 வகை தேர்வுகளுக்கு ஆண்டு அட்டவணையை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.
அரசு துறைகளில், பல்வேறு பணிகளுக் கான போட்டித் தேர்வுகள், தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டு துவக்கத்திலும், இதற்கான உத்தேச அட்டவணை வெளியிடப்படும். வரும், 2021ம் ஆண்டுக்கான தேர்வு குறித்த அட்டவணை, இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதில், 42 வகை தேர்வுகள் இடம் பெற்றுள்ளன. 'குரூப் - 1' தேர்வு, ஜன., 3; தொழில்துறை உதவி இயக்குனர் தேர்வு, ஜன., 9, 10ம் தேதிகளில் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற தேர்வுகளுக்கு, தேதிகள் குறிப்பிடப்பட வில்லை; மாதங்கள் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளன. இன்ஜினியரிங் பணிகளுக்கு, ஏப்ரல்; 'குரூப் - 2' தேர்வு, மே; சிறைக்காவலர் பதவிக்கான தேர்வு, ஜூன் மாதம் நடத்தப்படும்.'குரூப் - 3' தேர்வு ஜூலை; 'குரூப் - 4' தேர்வு, செப்டம்பர்; நுாலக பணிகள் தேர்வு, அக்டோபர்; மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கு, நவம்பர் மாதங்களில் தேர்வு நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுஉள்ளது. மேலும் விபரங்களை, >www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews