Breaking

Thursday, December 17, 2020

விடுதி மாணவர்களுக்கு 15 நாளுக்கு ஒரு முறை சோதனை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
''சென்னையில் உள்ள அனைத்து கல்லுாரி விடுதி மாணவர்களுக்கும், 15 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்யப்படும்,'' என, மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் கூறினார்.
தமிழகத்தில் கல்லுாரிகள் துவங்கப்பட்டதில் இருந்து, சென்னை, ஐ.ஐ.டி.,யில், 191 பேர்; அண்ணா பல்கலையில், ஆறு மாணவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கல்வி நிறுவனங்களில் தொற்றை கண்டறிய குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து, மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் கூறியதாவது:சென்னை ஐ.ஐ.டி.,யில் கொரோனா பரவியது தொடர்பாக, தொற்று நோய் நிபுணர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். தொற்றை கட்டுப்படுத்த, பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது, கல்வி நிறுவனங்களில் தொற்று கண்டறியப்பட்டதை தொடர்ந்து, அனைத்து கல்லுாரி விடுதிகளிலும், 15 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். தொடர்ந்து, மூன்று அல்லது நான்கு முறை சோதனை செய்வதால், தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும்.இவ்வாறு, அவர் கூறினார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog