பள்ளிக் கல்வித்துறை - அலுவலங்கள் / பள்ளிகளில் உள்ள பணியாளர்களுக்கான பதவி உயர்வு மற்றும் மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, December 24, 2020

Comments:0

பள்ளிக் கல்வித்துறை - அலுவலங்கள் / பள்ளிகளில் உள்ள பணியாளர்களுக்கான பதவி உயர்வு மற்றும் மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கல்வித் துறையின் கீழ் உள்ள அலுவலகங்கள் பள்ளிகளில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கு 2000-21 - ம் ஆண்டிற்கான உத்தேசக் காலிப் பணியிட மதிப்பீட்டின்படி 15.03.2020 நிலவரப்படி உதவியாளர் பதவி உயர்வு - பணிமாறுதல் பெறுவதற்கான தகுதிவாயந்த இளநிலை உதவியாளர் , தட்டச்சர் / சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை- II தேர்ந்தோர் பெயர்ப் பட்டியலில் இடம் பெற்று dhaar 130 பணியாளர்களுக்குப் பதவி உயர்வு பணிமாறுதலுக்கான கலந்தாய்வு 26.12.2020 ( சனிக்கிழமை அன்று நடத்தப்பட உள்ளது . தேர்ந்தோர் பெயர்ப் பட்டியலில் வரிசை எண் . 1 முதல் 130 வரை இடம் பெற்றுள்ளவர்களைப் பதவி உயர்வு கலந்தாய்வில் கலந்து கொள்ள அறிவுறுத்திட வேண்டும் .
பதவி உயர்வு பெறுபவர்கள் பதவி உயர்வைத் தற்காலிக உரிமைவிடல் செய்யும் பட்சத்தில் , அடுத்து உள்ளவர்களுக்கு பதவி உயர்வு ஆணை வழங்கிய எதுவாக 131 முதல் 150 வரை இடம் பெற்றுள்ளவர்கள் அழைக்கப்பட வேண்டும். ஆனால் , இவர்களுக்குப் பதவி உயர்வு அளிக்கப்படுவது மூத்தவர்கள் பதவி உயர்வினை உரிமைவிடல் செய்வதைப் பொறுத்து அமையும் . இக்கலந்தாய்வு நடைபெற உரிய வாதிகள் எற்பாடு செய்யப்பட வேண்டும் . காலதாமதம் ஏற்படாத வகையில் கலந்தாய்வினை நடத்திட எதுவாக ஏற்கனவே கலந்தாய்வுப்பணி மேற்கொண்ட கணினி இயக்குபவர்களை இக்கலந்தாய்வுப் பணிக்கு நியமிக்கலாம்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews