அம்மா இருசக்கர வாகன திட்டத்தில் பயன்பெற தகுதியுடைய மகளிர் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஏழை மகளிருக்கான அம்மா இரு சக்கர வாகன திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்படும் பயனாளிகளுக்கு அவர்கள் புதியதாக வாங்கும் மகளிருக்கான இரு சக்கர வாகனத்தின் விலையில் 50 சதவீதம் அல்லது ரூ.25,000 இவற்றில் எது குறைவோ அந்த தொகை மானியமாக வழங்கப்படும்.
வயது, முகவரி, ஓட்டுநர் உரிமம், வருமானம் உள்ளிட்ட சான்றுகளுடன் விண்ணப்பிக்கும் பயனாளிகளை சம்பந்தப்பட்ட வட்டார துணை ஆணையர்(வடக்கு, மத்தியம் மற்றும் தெற்கு) மற்றும் மாவட்ட அளவிலான பரிசீலனைக்குழு ஆய்வு செய்து தகுதியுள்ள பயனாளிகளுக்கு மானியம் விடுவிக்கப்படும். அம்மா இருசக்கர வாகனத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பயனாளிகள் அந்தந்த மண்டல அலுவலகங்களில் அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இலவசமாக விண்ணப்ப படிவங்களை பெற்று, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை வயது, முகவரி, ஓட்டுநர் உரிமம், வருமானம் உள்ளிட்ட சான்றுகளுடன் சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்.
* தகுதி உள்ள பெண்கள்
சென்னை மாநகராட்சியில் நகர்ப்புறங்களில் பணிபுரியும் 18 வயது முதல் 45 வயது வரை உள்ள இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ள, தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.2,50,000க்கு உட்பட்ட பெண்கள் மானிய ஸ்கூட்டர் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.
* மானியத்தில் முன்னுரிமை யாருக்கு?
ஆதரவற்ற பெண்கள், இளம் விதவைகள், மாற்றுத்திறனுடைய மகளிர், 35 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத மகளிர், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மகளிர், திருநங்கைகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.