Breaking

Thursday, December 10, 2020

வேலைவாய்ப்பு அலுவலக பதிவு வெளி மாவட்டத்திற்கு மாற்றம் செய்ய புதிய நடைமுறை அமல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
வேலை வாய்ப்பு அலுவலக பதிவை மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் செய்ய வட்டாட்சியர் (தாசில்தார்) அளவில் தரப்படும் குடும்ப குடிபெயர்ச்சி மற்றும் இருப்பிட சான்றிதழ்கள் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்ற நடைமுறை இதுவரை அமலில் இருந்து வந்தது. இந்த நடைமுறையை எளிமைப்படுத்தும் வகையில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவை மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் செய்ய தாசில்தார் அளவில் பெறப்படும் குடும்ப குடிபெயர்ச்சி மற்றும் இருப்பிட சான்றிதழ் இனி சமர்ப்பிக்க தேவையில்லை.
அதற்கு பதிலாக குடும்ப அடையாள அட்டை அல்லது ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை அல்லது கடவுசீட்டு (பாஸ்போர்ட்) அல்லது ஓட்டுநர் உரிமம் - இவற்றில் ஏதாவது ஒரு ஆவணத்தை சமர்ப்பித்தால் போதும் என தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புதுறை அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி இந்த துறையின் இயக்குனரால் வெளியிடப்பட்ட உத்தரவு கடந்த மாதம் 30ம் தேதியில் இருந்து அமலுக்கு வந்துள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog