22 உதவிப்பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, December 11, 2020

Comments:0

22 உதவிப்பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் புதியதாக 22 உதவிப்பேராசிரியர் பணியிடங்களுக்கான (மீன்வள அறிவியல் புலம்) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 2021 ஜனவரி 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.01/2020 நிறுவனம்: தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் பணியிடம்: நாகப்பட்டினம் பணி: உதவிப்பேராசிரியர் காலியிடங்கள்: 22 துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Aquaculture - 07
2. Fish Processing Technology - 02
3. Fishing Technology and Fisheries Engineering - 03
4. Aquatic Environment Management - 03
5. Fisheries Biology and Resource Management - 03
6. Fish Pathology and Health Management - 02
7. Fisheries Extension - 01
8. Fisheries Economics - 01
சம்பளம்: மாதம் ரூ.57,700 - 1,82,400
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் B.F.Sc. முடித்து முதுகலை பட்டம் பெற்று முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கவும். விண்ணப்பக் கட்டணம்: ரூ.2000. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி வகுப்பினர் ரூ.1000 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை நிதி அலுவலர், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம், நாகப்பட்டினம்-611 002 என்ற பெயரில் நாட்டுமையாக்கப்பட்ட ஏதேனும் ஒரு வங்கியில் இருந்து பெறப்பட்ட, நாகப்பட்டினத்தில் செலுத்தத்தக்க வரைவோலையாக எடுத்து செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: “பதிவாளர், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம், நாகப்பட்டினம்-611 002” பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 05.01.2021 மேலும் விவரங்கள் அறிய https://www.tnjfu.ac.in/downloads/carrers/ANNEXURE,%20INSTRUCTIONS%20&%20TERMS%20AND%20CONDITIONS.pdf மற்றும்
https://www.tnjfu.ac.in/downloads/carrers/TNJFU%20AP%20ADVERTISEMENT.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews