Breaking

Friday, December 11, 2020

பிறப்பு சான்றிதழில் குழந்தை பெயர் பதிய மேலும் 5 ஆண்டு அவகாசம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பிறப்பு சான்றிதழில், குழந்தையின் பெயரை பதிவு செய்வதற்கான அவகாசம், மேலும், ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
பிறப்பு பதிவு குழந்தைகளின் முதல் உரிமை. குழந்தை பிறந்த, 21 நாட்களுக்குள், பிறப்பை பதிவு செய்து, இலவச பிறப்பு சான்றிதழ் பெறலாம். பிறப்பு சான்றிதழில், குழந்தையின் பெயரை பதிவு செய்தால் மட்டுமே, அது முழுமையான சான்றிதழாகும். குழந்தையின் பிறப்பு, பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருந்தால், 12 மாதங்களுக்குள், குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர், எழுத்து வடிவிலான உறுதிமொழியை, சம்பந்தப்பட்ட பிறப்பு, இறப்பு பதிவாளரிடம் அளித்து, இலவசமாக பெயர் பதிவு செய்யலாம். CLICK HERE TO READ OFFIIAL NEWS மாற்ற இயலாது
ஓராண்டு முதல், 15 ஆண்டுகளுக்குள், உரிய தாமத கட்டணம் செலுத்தி, குழந்தை பெயரை பதிவு செய்யலாம். திருத்தி அமைக்கப்பட்ட, தமிழ்நாடு பிறப்பு, இறப்பு பதிவு விதிகள், 2000ன்படி, 2000 ஜன.,1க்கு முன் பிறந்த குழந்தைகளுக்கு, 2014 டிச., 31 வரை, பெயர் பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டது. இந்த அவகாசம் முடிந்த பின், மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு அவகாசம் அளிக்கப்பட்டது. அதன்படி, 2019 டிசம்பர், 31ல், அவகாசம் முடிந்த நிலையில், மேலும், ஐந்து ஆண்டுகளுக்கு, அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.ஒரு முறை குழந்தையின் பெயரை பதிவு செய்த பின், எக்காரணம் கொண்டும், மாற்ற இயலாது. எனவே, குழந்தையின் பெயரை, இறுதியாக முடிவு செய்த பின், சம்பந்தப்பட்ட பிறப்பு, இறப்பு பதிவாளரை அணுகி, உறுதிமொழி படிவம் அளித்து பதிவு செய்யலாம்.கிராம ஊராட்சியில், பிறப்பு பதிவு செய்யப்பட்டிருந்தால், கிராம நிர்வாக அலுவலரையும், பேரூராட்சியாக இருந்தால், செயல் அலுவலர் அல்லது துப்புரவு ஆய்வாளரையும் அணுக வேண்டும். CLICK HERE TO READ OFFIIAL NEWS அறிவிப்பு
கன்டோன்மென்ட், நகராட்சி, மாநகராட்சியில், பிறப்பு பதிவு செய்திருந்தால், துப்புரவு ஆய்வாளரையும், ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை போன்றவற்றில், பிறப்பு பதிவு செய்யப்பட்டிருந்தால், சுகாதார ஆய்வாளரையும், பெயர் பதிவு செய்ய அணுக வேண்டும். அவகாசம் நீட்டிப்பு, இனி வரும் காலங்களில் வழங்க இயலாது. எனவே, இந்த வாய்ப்பை பயன்படுத்தி, விடுபட்டவர்கள் பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழை, பெற்றுக் கொள்ள வேண்டும் என, தமிழக அரசு அறிவித்து உள்ளது. CLICK HERE TO READ OFFIIAL NEWS 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog