Breaking

Sunday, November 22, 2020

விபத்தில் ஆசிரியை மரணம்: கணவருக்கு ரூ.16 லட்சம் இழப்பீடு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
விபத்தில் உயிரிழந்த தனியார் பள்ளி ஆசிரியையின் கணவருக்கு ரூ.16.52 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. பட்டாபிராமைச் சேர்ந்த வரலட்சுமி (25), தனியார் பள்ளி ஆசிரி யையாகப் பணியாற்றிய போது கடந்த 2016 டிசம்பர் மாதத்தில் வண்ட லூரில் இருந்து கேளம்பாக்கத்துக்கு இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்றார். கட்டுப்பாட்டை இழந்து அந்த வாகனம் விபத்துக் குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த வரலட்சுமி உயிரிழந்தார். மனைவி இறப் புக்கு இழப்பீடு கோரி கணவர் பிரபு, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டுத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரருக்கு இழப்பீடாக ரூ.16.52 லட்சத்தை, ஆண் டுக்கு 7.5 சதவீதம் வட்டியுடன் வழங்க வேண்டும் என காப்பீட்டு நிறுவ னத்துக்கு உத்தரவிட்டார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog